PM Modi TN Visit: பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வரும் இரண்டு நாள் பயணத்தில், அவர் பங்கேற்க உள்ள நிகழ்ச்சிகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி:
பிரதமர் மோடி நடப்பாண்டில் ஏற்கனவே இரண்டு முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்து, பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இந்நிலையில் மூன்றாவது முறையாக அடுத்த வாரம், இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தர உள்ளார். இதில் பல்வேறு அரசு மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார். இன்னும் ஒரு சில வாரங்களில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இந்த சூழலில் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வந்து செல்வது, அக்கட்சியின் தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, பிரதமர் மோடியின் வருகையின் போது நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில், பாஜக கூட்டணி தலைவர்கள் பங்கேற்பார்கள் என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வரும் இரண்டு நாள் பயணத்தில், அவர் பங்கேற்க உள்ள நிகழ்ச்சிகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையொட்டி, குறிப்பிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
27ம் தேதி பயண விவரம்:
- 27ம் தேதி பிற்பகல் 1.20 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து, விமானம் மூலம் மதியம் 2.06 மணிக்கு கோவை சூலூர் வருகிறார்
- பிற்பகல் 2.10 மணிக்கு சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்கிறார் பிரதமர் மோடி
- 2.45 முதல், 3.45 வரை அண்ணாமலையின் என் மண், என் மக்கள் பயணம் நிறைவு விழா மற்றும் பொதுகூட்டத்தில் கலந்துகொள்கிறார் பிரதமர் மோடி
- 3.50 மணிக்கு பல்லடத்தில் இருந்து சூலூர் விரைந்து, அங்கிருந்து 5.05 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுரையை சென்றடைகிறார்.
- 5.15 மணி முதல் 6.15 மணி வரை மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர்
- 6.15 முதல் 6.45 மணிக்குள் மதுரையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு சென்று அன்று இரவு ஓய்வு எடுக்கிறார் பிரதமர்
- அன்றைய தினம் அரசியல் கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
28ம் தேதி பிரதமரின் பயண திட்டம்:
- காலை 8.15 மணிக்கு விடுதியில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையம் செல்கிறார்
- 8.40 மணிக்கு மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடிக்கு 9.00 மணிக்கு சென்றடைகிறார் பிரதமர் மோடி
- 9.45 மணி முதல் 10.30 மணி வரை அரசின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்கிறார்
- 10.35 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக புறப்பட்டு, 11.10 மணிக்கு திருநெல்வேலி செல்கிறார்
- 11.15 to 12.15 மணிக்கு பாஜக பொதுகூட்டத்தில் பங்கேற்று தனது தமிழக பயணத்தை முடிக்கிறார்
- 12.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி