PM Modi: தமிழ்நாட்டிற்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி...பாதுகாப்புகள் தீவிரம்... ஏற்பாடுகள் என்னென்ன?

பிரதமர் நரேந்திர மோடி இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள காந்திகிராமம், பல்கலைக்கழத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ளார்.

Continues below advertisement

பிரதமர் நரேந்திர மோடி இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள காந்திகிராமம், பல்கலைக்கழத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ளார். இதில் தமிழக முதல் அமைச்சர் மற்றும் தமிழக கவர்னர் ஆகியோர் உடன் கலந்து கொள்ளவுள்ளனர். இவ்விழாவிற்கு இன்று பிரதமர் மோடி மதுரையில் இருந்து திண்டுக்கல்லிற்கு சாலை மார்க்கமாக செல்லயிருப்பதால், இதன் பொருட்டு நேற்று பாதுகாப்பு முன்னோட்டம் நிகழ்வு நடைபெற்றது. இதனால் இன்று மாலை 05.00 மணிவரையிலும்பிற மாவட்டங்களில் இருந்து மதுரை, திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்து  மாற்று பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

பெங்களூருவில் பிரதமர் மோடி

பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்றும் நாளையும் பங்கேற்பதற்காக தென்னிந்திய மாநிலங்களுக்கு வருகை தருகிறார். இன்று கர்நாடக மாநிலம் பெங்களூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். குறிப்பாக பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது டெர்மினலை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்த விமான நிலையம் ரூ. 5,000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் பிரதமர் மோடி

பின்பு, பிரதமர் மோடி மதுரையில் இருந்து காந்தி கிராமம் பல்கலைக் கழகத்துக்கு ஹெரிகாப்டரில் செல்ல திட்டமிட்டிருக்கிறார். இதற்காக காந்தி கிராமத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டு ஒத்திகைகளும் பார்க்கப்பட்டன. அதே நேரத்தில் இன்று காலை முதேலே மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெங்களூரில் இருந்த வரும் பிரதமர் மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதலமைச்சர் ஸ்டாலின்

பிரதமர் நரேந்திர மோடி இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள காந்திகிராமம், பல்கலைக்கழத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ளார். இதில் தமிழக முதல் அமைச்சர் மற்றும் தமிழக கவர்னர் ஆகியோர் உடன் கலந்து கொள்ளவுள்ளனர். இதனால் கரூரில்  இருந்து சாலை மார்க்கமாக காந்தி கிராம் செல்கிறார்.

பாதுகாப்பு தீவிரம்

பிரதமர் மோடி வருகையையொட்டி காந்தி கிராம கிராமி பல்கலைக் கழகத்தல் பலத்த  பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் திண்டுக்கல் காந்திகிராமம், சின்னாளப்பட்டி, அம்பாத்துரை ஆகியவை பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக வளாகம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க

RahulGandhi: ஊடகங்கள் உதவாது; இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கக் காரணமே இதுதான் - ராகுல் காந்தி

மேட்டூர் அணையின் நீர் வரத்து இரண்டாம் நாளாக 15,000 கன அடியாக நீடிப்பு!

Continues below advertisement
Sponsored Links by Taboola