பிரதமர் மோடி இன்று தெலங்கானா மற்றும் தமிழ்நாடு பயணம் மேற்கொள்கிறார். அதில் முதலாவதாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு பிரதமர் மோடி சென்றார். அவருக்கு விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.  அதைத் தொடர்ந்து அவர் ஐஎஸ்பி கல்லூரியின் 20ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்றார். அங்கு அவர் உறையாற்றினார்.  அதைத் தொடர்ந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார். சென்னை வந்த பிரதமரை மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அமைச்சர்கள் துறைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் வரவேற்றனர். 


சென்னை விமான நிலையத்திலிருந்து பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் அடையாறு கப்பல்படை தளத்திற்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். அதன்பின்பு சாலை மார்க்கமாக பிரதமர் மோடி நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு சென்றார். அப்போது வழி நெடுகிலும் திரண்டு இருந்த பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 


 






அப்போது தன்னுடைய காரிலிருந்து நின்றபடியே பிரதமர் மோடி கை அசைத்து பாஜக தொண்டர்கள் அளித்த உற்சாக வரவேற்பை ஏற்றார். அவர் காரில் நின்று வரவேற்றதை பாஜக தொண்டர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்தனர்.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண