மேலும் அறிய

Petrol Diesel Price Hike: விலைவாசி எல்லாம் எகிறப்போது... பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் வேதனை

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் உருவாகியுள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையே நடந்து வரும் போர் மொத்த உலகத்தின் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது. இந்தியாவின் பொருளாதாரத்தில் இதன் தாக்கம் நாளுக்கு நாள் கடுமையாக எதிரொலித்து வருகிறது.

அமெரிக்கா - ஈரான் போர்:

கச்சா எண்ணெய்யை கொண்டு வரும் ஹார்மூஸ் நீரிணை வழித்தடம் இந்த போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவிற்குள் கச்சா எண்ணெய்யை கொண்டு வருவதே சவாலாக மாறியுள்ளது. இந்த சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வணிக சிலிண்டரின் விலையை ஒரே நாளில் ரூபாய் 1000 வரை உயர்த்தியது. இதனால், சிலிண்டர் விலை ரூபாய் 3 ஆயிரத்து 300 ஆக உயர்ந்தது. 

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு:

இந்த சூழலில், பெட்ரோல் மற்றும் டீசலை லிட்டருக்கு ரூபாய் 3ம், சிஎன்ஜி-யை கிலோவிற்கு ரூபாய் 2ம் உயர்த்தியுள்ளனர். இது மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய்யின் விலை மிக மிக குறைவாக இருந்த போது பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு அப்போது தொடர்ச்சியாக உயர்த்தி வந்தது. தற்போது நெருக்கடியான சூழலில் மீண்டும் உயர்த்தியுள்ளது. 

மத்திய அரசின் இந்த செயலால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கும் சூழல் உண்டாகியுள்ளது. ஏற்கனவே சிலிண்டர் தட்டுப்பாடு கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிகழ்ந்தபோது டீக்கடைகள், உணவகங்களில் தேநீர், உணவுப்பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. வணிக சிலிண்டர் விலை உயர்ந்தபோது தங்கும் விடுதிகளின் வாடகை உயர்த்தப்பட்டது. தற்போது, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், சரக்குப் போக்குவரத்தில் இதன் தாக்கம் எதிரொலிக்க உள்ளது. 

அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்:

தொலைதூரங்களுக்கு பொருட்களை கொண்டு செல்லும் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களின் வாடகைகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட போக்குவரத்து கட்டணங்களின் விலையும் உயரும் அபாயம் உருவாகியுள்ளது.

இந்த சூழல் எப்போது சரியாகும்? என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. நிலைமை சீரானால் விலைவாசி கட்டுக்குள் வருமா? என்ற கேள்வியும் உருவாகியுள்ளது. இந்த சூழலில் இந்தியாவின் அமெரிக்க டாலர் மதிப்பும் சரிந்து வருகிறது. இது பங்குச்சந்தையிலும் எதிரொலித்து வருகிறது. 

தங்கத்தின் விலையும் கட்டுக்கடங்காமல் சென்றுள்ள சூழலில், பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் தங்கம் வாங்க வேண்டாம், பெட்ரோல் டீசலை சேமிக்கும் பொருட்டு பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துங்கள் என்று பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தியுள்ளார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

பொருளாதார உரிமை.. அக விலைப்படி நிலுவை; அரசு ஊழியர்களுக்கு உடனே வழங்கக் கோரிக்கை!
பொருளாதார உரிமை.. அக விலைப்படி நிலுவை; அரசு ஊழியர்களுக்கு உடனே வழங்கக் கோரிக்கை!
மதுரையில் எகிறிய மல்லிகைப் பூ விலை.. (06.06.2026) இன்றைய முழு விலை நிலவரம் என்ன?
மதுரையில் எகிறிய மல்லிகைப் பூ விலை.. (06.06.2026) இன்றைய முழு விலை நிலவரம் என்ன?
’’மகள் ஓடிப்போக நீதா காரணம்’’ ஆத்திரத்தில் மூக்கை கடித்து துப்பிய மாப்பிள்ளையின் நண்பர்
’’மகள் ஓடிப்போக நீதா காரணம்’’ ஆத்திரத்தில் மூக்கை கடித்து துப்பிய மாப்பிள்ளையின் நண்பர்
Thiruparankundaram: திருப்பரங்குன்றம் விவகாரம்; நிர்மல்குமாரின் பேட்டி மக்கள் மீதான அக்கறையின்மையை காட்டுகிறது - தமிழிசை விமர்சனம்
Thiruparankundaram: திருப்பரங்குன்றம் விவகாரம்; நிர்மல்குமாரின் பேட்டி மக்கள் மீதான அக்கறையின்மையை காட்டுகிறது - தமிழிசை விமர்சனம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Putin Backs India: “இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தா எதிர்விளைவுகள ஏற்படுத்தும்“ - US-க்கு புதின் மறைமுக எச்சரிக்கை
“இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தா எதிர்விளைவுகள ஏற்படுத்தும்“ - US-க்கு புதின் மறைமுக எச்சரிக்கை
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
டாடா EV காருக்கு ரூ.1.45 லட்சம் மெகா தள்ளுபடி: செம சேஃப்டி, ரேஞ்ச், இறுதி விலை- இதோ விவரம்!
டாடா EV காருக்கு ரூ.1.45 லட்சம் மெகா தள்ளுபடி: செம சேஃப்டி, ரேஞ்ச், இறுதி விலை- இதோ விவரம்!
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
MK Stalin: விரைவில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
MK Stalin: விரைவில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
Embed widget