பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது தொடர்பாக என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும் மாநில பாஜக தலைவர் அண்ணமாலை கூறியுள்ளார்.


பாஜக தலைமையகம் மீதான குண்டுவீச்சு சம்பவத்தின் உண்மை பின்னணியை கண்டறிய வேண்டும் என்று கூறிய, அவர், தொடர் குற்றங்களில் ஈடுபடுவர் நீட் தேர்வு ஆதரவு காரணமாக குண்டுவீசுவது என்று கூறுவது நகைச்சையாக உள்ளதாகவும், அந்த நபருக்கு NEET என்பதற்கு என்ன அர்த்தம் என்னவென்று கைதானவருக்கு தெரியுமா? என நமக்கு தெரியவில்லை எனவும் கூறினார். நீட் நிலைப்பாடுக்கு எதிர்ப்பு என கைது செய்யப்பட்டவர் கூறுவதாக போலீசார் தெரிவிப்பது நம்பும்படியாக இல்லை எனவும் அண்ணாமலை கூறினார்.


தமிழ்நாடு பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதன் பின்னணியில் திட்டமிட்ட சதியுள்ளதாகவும், கைதானவர் அளித்துள்ளதாக கூறப்படும் வாக்குமூலத்தின் பின்னணியில் கூட்டுச்சதி உள்ளதாக பாஜக கருதுவதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.


 






முன்னதாக, இந்த சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “ பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக நந்தனத்தை சேர்ந்த வினோத் (எ) கருக்கா வினோத் கைது செய்யப்பட்டுள்ளார்.  மேற்கொண்டு நடத்திய விசாரணையில், தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்பாக பா.ஜ.க.வின் நிலைபாட்டை கருத்தில் கொண்டு, ஆத்திரத்தில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் 3 பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசியது தெரியவந்துள்ளது.


இவர் மத ரீதியாகவோ, அரசியல் சம்மந்தமாகவோ மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபடவில்லை. இவர் இவ்வாறு பொது பிரச்சனையில் தானாகவே தலையிட்டு குடிபோதையில் இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் மனநிலை கொண்டவர். இவர் மீது ஏற்கனவே 4 கொலை முயற்சி வழக்குகள் உட்பட சுமார் 10 குற்ற வழக்குகள் உள்ளன. இவர் மீது 2015 ஆம் ஆண்டு R-1 மாம்பலம் காவல் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியதும், 2017ம் ஆண்டு E-3 தேனாம்பேட்டை காவல் நிலைய வாசலில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளதும், இது தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண