அன்பார்ந்த வாசகர்களே அயல்நாடு செல்ல வேண்டும் நன்றாக சம்பாதிக்க வேண்டும்… பிறகு தாய் நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பு, எண்ணமும் கூட…ஆனால் சிலரை நாம் பார்த்தால் அவர்கள் அயல் நாட்டிற்கு வேலைக்காக செல்வார்கள் பிறகு குடும்பத்தோடு சென்று அங்கேயே செட்டில் ஆகிவிடுவார்கள்… இறக்கும் தருவாயில் இருக்கும் பொழுது கூட அவர்கள் தாயகம் திரும்ப மாட்டார்கள் அங்கேயே நிரந்தரமாக இருந்து விடுவார்கள்…

 இப்படியாக பல ஆண்டுகளாக அங்கேயே தங்கி இருப்பவர்கள் யார்? அவர்களின் கிரக நிலை எப்படி இருக்கும் என்பதை பற்றி ஆராய்ந்தால்… ஒருவருக்கு எட்டாம் பாவகம் வலுத்துக் காணப்பட்டால்..அயல் நாட்டில் நிரந்தரமாக இருப்பார்கள். 12 ஆம் பாவம் வலுத்திருந்தாலும் அவர்களை நாடு விட்டு நாடு கொண்டு செல்லும்… பன்னிரண்டாம் பாவத்தோடு எட்டாம் பாவத்தோடு ராகு அல்லது கேதுக்கள் சம்பந்தப்பட்டிருந்தால்… அவர்கள் அயல்நாட்டிலே இருப்பார்கள் மரித்தாலும் கூட அயல் நாட்டிலே அடக்கம் செய்யப்படும் அளவிற்கு அவருடைய அமைப்பு இருக்கும்… குறிப்பாக குரு நல்ல நிலையில் இருந்து எட்டாம் பாவத்தோடு தொடர்பு பெற்றிருந்தால் கூட அவர்களுடைய குழந்தைகள் சந்ததிகள் எல்லாம் அயல்நாட்டில் வசிக்கும் அதற்கு ராகு துணை புரிய வேண்டும்…. எந்த கிரகம் எட்டாம் பாவத்தோடு தொடர்பு பெற்று ஆட்சி உச்சம் பெற்று ராகுவோடு தொடர்பு பெற்றிருக்கிறது அவர்களுக்கு அயல்நாடு தொடர்பு ஏற்பட்டு பல வருடங்களாக அவர்கள் அங்கேயே தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் குடும்பத்தோடு செட்டில் ஆகிவிடுவார்கள் குழந்தைகள் பள்ளிகளில் படித்து அங்கேயே அந்த கலாச்சாரத்தோடு ஒன்று போய் வாழ தொடங்கி விடுவார்கள்…..

 நம்முடைய வேர்களை மறக்காமல் நாம் தாயகம் திரும்ப வேண்டும் என்று வயதான காலத்தில்  ஆசை தோன்றலாம் இருந்தாலும் கூட அவர்களால் எளிதில் தாயகம் திரும்ப முடியாமல் அங்கேயே மருத்துவ வசதிகளை பார்த்து தங்கியும் கூட இருப்பவர்களையும் பார்த்திருக்கிறோம்… நான்காம் பாவக அமைப்புகள் ராகுவோடு தொடர்பு பெற்றிருந்தாலும் ஜாதகத்தில் செவ்வாய் ராகு செவ்வாய்க் கேது சேர்ந்திருந்தாலும் இந்த அமைப்புகளால் இவர்கள் நிச்சயமாக அயல்நாட்டில் வசிப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளது…. மிகப்பெரிய பணக்கார அமைப்பு இருக்க வேண்டும் என்றால் நன்றாக எட்டாம் பாவகம் வலிமையாக இருந்து லக்னத்திற்கு துணை நிற்க நிச்சயமாக அவர்கள் சாதிப்பவர்களாக இருப்பார்கள் அதிகம்படியாக பணம் சம்பாதிப்பார்கள்…

 எந்த நாட்டிற்கு ஒருவர் போய் குடியேறுவார் என்பதை எப்படி கண்டுபிடிப்பது லக்கினத்திற்கு எட்டில் இருக்கக்கூடிய கிரகம் எந்த திசையை சார்ந்ததோ அந்த அமைப்புகளை வைத்தும் எட்டாம் பாவகம் லக்கினத்திற்கு எந்த திசையை சார்ந்தும் இருக்கிறதோ அந்த அமைப்புகளை வைத்தும் அவருடைய திசையை கண்டுபிடிக்கலாம் எடுத்துக்காட்டு சிம்ம லக்கனம் எட்டாம் பாகத்தில் குரு இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் குரு தெற்கு திசையை குறிப்பார் ஆனால் மீனம் வடமேற்கு திசையை குறிக்கும் இப்படியாக அந்த ஜாதகர் வடமேற்கு திசையை நோக்கி பயணிப்பார் என்று கூறலாம் அங்கே அவருக்கு அதிர்ஷ்டங்கள் கிடைக்கும் தற்போது தமிழ்நாட்டில் பிறந்த ஒருவருக்கு வடமேற்கு என்று எடுத்துக்கொண்டால் ஐக்கிய அமீரகம் ஐரோப்பா வட அமெரிக்கா போன்ற பகுதிகளுக்கு அவர்கள் பயணம் செய்யலாம்… விடுமுறை கிடைக்கும் பொழுது அயல்நாட்டில் இருப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு வந்து  கோவில்களுக்கு பயணம் செய்யுங்கள் ஆன்மீக நன்மையை பெற்றுக் கொள்ளுங்கள்..