தந்தை பெரியாரின் 49 வது நினைவு நாளான இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் தனது டிவிட்டர் பக்கத்தில் தந்தை பெரியார் குறித்து குறிப்பிட்டு பதிவிட்டுள்ள பதிவில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டது. அதில், “தந்தை பெரியாரின் 49-ஆவது நினைவுநாள்! வாழ்ந்தபோது எதிரிகளுக்கு சிம்மசொப்பனம்; நிறைந்து 49 ஆண்டுகளான பின்பும் வீரியம் குறையாமல் இருக்கிறது பெரியாரியம்; ஆரியம் கற்பிக்கும் ஆதிக்கத்தை அது சாய்த்தே தீரும்!” என குறிப்பிட்டுள்ளார்.