பெரியாரின் பிறந்தநாளில் அவரை அவமதிக்கும் விதமாக, செயல்பட்ட ஒருவருக்கு திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.


தந்தை பெரியாரின் 143ஆவது பிறந்ததினம் இன்று. இதைமுன்னிட்டு, திராவிட பற்றாளர்கள், பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுவோர்கள், அரசியல் கட்சியினர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிற கட்சி தலைவர்கள் பெரியாரின் சிலைக்கும், உருவப்படத்திற்கும் மலர்தூவி அஞ்சலி மரியாதை செலுத்தினார்கள். தமிழ்நாடு மட்டுமில்லாமல் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களிலும் பெரியாருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதுஒருபுறமிக்க, பெரியார் எதிர்ப்பாளர்கள், அவரின் பிறந்தநாளில் #பெரியாராவது_மயிராவது #ஈரோட்டு_ஈரவெங்காயம் என்று இந்திய அளவில் டுவிட்டரில் டிரெண்ட் செய்தனர். 


இந்த நிலையில், பெரியாரை அவமதிக்கும் விதமாக பேஸ்புக் பக்கத்தில் ஒருவர், ஒவ்வொரு வீட்டிலும் பெரியாருக்கு இடத்தை ஒதுக்குங்கள்.. இடம் கொஞ்சம் சின்னதாதான் இருக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ கிழவா எனப்பதிவிட்டு, கழிவறையில் பெரியாரின் புகைப்படம் இருப்பதைபோல, புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார். இதற்கு சிலர் கண்டனம் தெரிவித்த நிலையில், அந்த நபருக்கு மன்னார்குடி திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா பதிலடி கொடுக்கும் வகையில், “அவர் கேரக்டரயே புரிஞ்சிக்கல இந்த லூசுங்க. பெரியார்: அட சௌகரியமா போச்சு. இனி நான் மூத்திர சட்டிய தூக்க தேவையில்ல.தெனமும் நீ இங்க வந்துதான் ஆகனும், அப்போ நான் சொல்ற செய்திய நீ கேட்டுதான் ஆகோனும். இந்த கக்கூஸ்ல இருக்குற நாத்தத்தை விட உன் சங்கி வாழ்வு எவ்வளவு அசிங்கம்னு சொல்றேன் வா” என பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.







 


சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வரவேற்பு கொடுத்தன. அதன்படி, பெரியாரின் பிறந்தநாளில் அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர், சமூகநீதிநாள் உறுதிமொழி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், பலரும் சமூகநீதிநாள் என்று உறுதிமொழி ஏற்றனர்.