பேரறிவாளனை விடுதலை செய்யுன் தமிழ்நாடு அரசின் தீர்மனத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார்கள். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவிக்கு வரும் 7 பேரை விடுதலை செய்வது குறித்து 161 ஆவது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்கலாம் என கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


இதுகுறித்து, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநருக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், 2 ஆண்டுகளுக்கு மேலாகியும், ஆளுநர் அந்த மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார். இதனையடுத்து, பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசு தலைவர்தான் முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் முன்னாள் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்திருந்தார்.




இதைத்தொடர்ந்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 


அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜராகி இருந்த சொலிசிட்டி ஜெனரல் இந்த வழக்கை ஒருவார காலம் ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதைக்கேட்ட நிதிபதிகள் “2018 ஆம் ஆண்டே பேரறிவாளனை விடுவிக்கலாமா வேண்டாமா என்பதை ஆளுநரே முடிவெடிக்கலாம் என்ற உத்தரவை பிறப்பித்திருக்கிறோம். ஆனால் அவர் ஏன் முடிவை எடுக்கவில்லை. இதை ஏற்க முடியாது” எனத் தெரிவித்தனர். 


தமிழக அரசு தரப்பில், அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர். ஆனால் ஆளுநர் உரிய முடிவு எடுக்கவில்லை. ஆளுநர் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வந்தார்” என கருத்து தெரிவித்தது.




பேரறிவாளன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “கடந்த 30 ஆண்டுகளாக பேரறிவாளன் சிறையில் உள்ளார். அவரை விடுதலை செய்ய ஆளுநர் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருகிறார். எனவே அவரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர். 


இதைக்கேட்ட உச்சநீதிமன்றம் ஆளுநர் ஏன் முடிவெடுக்கவில்லை என்பதுகுறித்து உரிய விளக்கம் அளிக்கவேண்டும் என மத்திய அரசுக்கு உத்தவிட்டு வழக்கை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தது. மீண்டும் வழக்கை ஒத்திவைக்க கோரக்கூடாது எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. 



மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


 



ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



 



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



 



பேஸ்புக் பக்கத்தில் தொடர



 



ட்விட்டர் பக்கத்தில் தொடர



 



யூடியூபில் வீடியோக்களை காண