மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் பேசிய ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், "உலகைத் தீமை சூழும் போது அதனை அறுப்பது அறம். எல்லோரையும் சமமாக பார்ப்பது அறம். தீயவர்களை வதம் செய்வது அறம். அதன் பெயரே புரட்சி. அதை செய்பவரே புரட்சித்தலைவர். அதன்படி உலகின் முதல் புரட்சித்தலைவர் முருகப்பெருமான்.

Continues below advertisement


"உலகின் முதல் புரட்சித்தலைவர் முருகப்பெருமான்"


என்னை மதுரைக்கு வரவழைத்தது முருகன். என்னை வளர்த்தது முருகன். துணிச்சல் தந்தது முருகன். மதுரைக்கும் முருகனுக்கும் நெருக்கும் அதிகம். முதல்படை வீடும் ஆறாம் படை வீடும் இங்குதான் உள்ளது. முருகனின் தாயாரும் முதல் சங்கத்திற்கு தலைமையேற்று மதுரையில் தான் இருந்தார்.


மதுரையில் முருகனின் தாயாரும் தந்தையும் இருக்கிறார். முருகனும் இருக்கிறார். அந்தப் புண்ணியத்தில்தான் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மதுரையில் அவதரித்தார். தென் தமிழகத்தின் மாபெரும் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர், முருகனின் அவதாரமாக கருதப்படுகிறார். அவர் சிலையருகே மயிலும் வைக்கப்பட்டுள்ளது. தேவர் வடிவில் மனிதன் உருவில் முருகன் வாழ்ந்தார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் முருகன் அவதாரத்தில் வாழ்ந்து மறைந்தார். அவரை தாழ்ந்து பணிந்து வணங்குகிறேன்.


என்ன பேசினார் பவன் கல்யாண்? 


நமது நாட்டின் நம்பிக்கைக்கு அழிவில்லை யாராலும் அழிக்க முடியாது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஆழமாக உள்ளது. முருகனின் வடிவத்தில் நமது அறம் தொடர்ந்து வளர்கிறது. எல்லோரையும் சமமாக பார்ப்பதால், தீயவர்களை வதம் செய்து அநீதியை அழித்தவர். உலகின் முதல் புரட்சித்தலைவர் முருகப்பெருமான். 


முருகப்பெருமானுக்காக இங்கு வந்துள்ளோம். முருகன் மாநாட்டை ஏன் குஜராத்தில் உபியில் நடத்தாலமே என சிலர் கேட்கிறார்கள். இந்த சிந்தனை ஆபத்தானது. கிறிஸ்துவர், கிறிஸ்துவராக இருக்கலாம். இஸ்லாமியர், இஸ்லாமியராக இருக்கலாம். இந்து இந்துவாக இருந்தாலே இவர்களுக்கு பிரச்சனை. ஒருவர் இந்துவாக இருந்தால் மதவாதி என்கிறார்கள். உங்கள் நாகரிகத்தை நாங்கள் கேள்வி கேட்கவில்லை. எங்கள் மதத்திற்கு மரியாதை கொடுக்காவிட்டாலும் அவமரியாதை செய்யாதீர்கள்.


முருகனை கேள்வி கேட்க அவர்கள் யார்?


அரேபியாவில் இருந்த வந்தவர்களின் மதம் குறித்து கேட்க முடியுமா? அதற்கான துணிச்சல் இருக்கா? சீண்டி பார்க்காதீர்கள் சாது மிரண்டால் காடுகொள்ளாது. முருகன் தமிழ்கடவுள். ஆனால், அவர் எல்லா இடத்திலும் பரந்து இருக்கிறார். வட இந்தியாவில் கார்த்திகேயராக, ஆந்திரா, கர்நாடகாவில் சுப்பிரமணியனாக இருக்கிறார்.


சிலர் இங்கு நிறத்தை வைத்து அரசியல் செய்கின்றனர். நமக்கு நிறத்தில் எந்த பேதமும் இல்லை. நான் நிறத்தின் வழியாக பார்க்கவில்லை. கருப்பை நிறத்தை வைத்து அரசியல் செய்யும் கூட்டம் உள்ளது. முருகரின் கந்தசஷ்டி கவசத்தை கிண்டல் செய்தனர்.


என் கடவுள், கலாச்சாரம், பண்பாட்டை கேலி செய்தனர். இது, தான் ஜனநாயகம் என்பார்கள். முருகனை கேள்வி கேட்க அவர்கள் யார்? மற்ற மதத்தை பேச முடியுமா? அரேபிய நாடுகளில் இருந்த வந்தவர்களை பார்த்து பேச முடியுமா நாம் அமைதியானவர்கள்" என்றார்.