Insufficient Beds | கள்ளக்குறிச்சி: படுக்கை வசதியின்மையால் தரையில் படுத்து உறங்கி சிகிச்சைபெறும் நோயாளிகள்..

கள்ளக்குறிச்சி உள்ள தலைமை அரசு மருத்துவமனையில், படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் தரையில் படுத்துறங்கி சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது

Continues below advertisement

 

Continues below advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியது, கள்ளக்குறிச்சியில் உள்ள தலைமை அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் தரையில் படுத்து உறங்கி சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 450 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை இயங்கிவருகிறது , தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நோயாளிகளுக்கு படுக்கைவசதி இல்லாமல் தரையில் படுத்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில்  100 சாதாரண படுக்கைகள், 310 ஆக்சிசன் படுக்கைகள் , ஐசியு பிரிவில் 40 படுக்கைகளும் என மொத்தம் 450 படுக்கைகள் உள்ளன. இவற்றில் 100 படுக்கைகள் கொண்ட சாதாரண படுக்கை வசதி கொண்ட மருத்துவ பிரிவில் 99 காலியாக உள்ளது மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது, 310 ஆக்சிசன் உள்ள அறையில் ஜாலியாக ஒரு படுக்கை கூட இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது, ஐசியு பிரிவில் 40 படுக்கைகளும் நிரம்பி உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்,

இந்த நிலையில் புதிதாக வரும் நோயாளிகளுக்கு படுக்கை வசதி இல்லாமல் தரையில் படுத்து சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கின்றனர் மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என்பதும், நாளுக்கு நாள் நோய் தொற்று அதிகரித்துவரும் நிலையில் ஆக்ஸிஜன் படுக்கைகளை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Continues below advertisement