மேலும் அறிய

Amrit Bharat Express: நாகர்கோயில் - தாம்பரம் ரயிலின் பயண நேர மாற்றம்? - பயணிகள் கோரிக்கை நிறைவேறுமா?

அம்ரித் பாரத் ரயிலானது வாரந்தோறும் புதன்கிழமையில் சென்னை தாம்பரத்தில் இருந்தும், வியாழக்கிழமையில் திருவனந்தபுரத்தில் இருந்தும் வாராந்திர ரயிலாக இயக்கப்படுகிறது.

சமீபத்தில் தொடங்கப்பட்ட திருவனந்தபுரம்  சென்ட்ரல் - தாம்பரம் இடையேயான அம்ரித் பாரத் ரயிலின் நேரத்தை மாற்ற வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அம்ரித் பாரத் ரயில் சேவை

தெற்கு ரயில்வே சார்பில் தமிழ்நாட்டில் பல்வேறு வழித்தடங்களிலும் பல தரப்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தொலை தூரங்களில் இயக்கப்படும் ரயில்கள் நள்ளிரவில் சேருமிடத்தை அடையாத வண்ணம் பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு அட்டவணை வடிவமைக்கப்படுகிறது. இப்படியான நிலையில் சமீபத்தில் வண்டி எண் 16121/16122 தாம்பரம் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே அம்ரித் பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த சேவையை திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.  

சிக்கலாக இருக்கும் பயண நேரம்

இந்த அம்ரித் பாரத் ரயிலானது வாரந்தோறும் புதன்கிழமையில் சென்னை தாம்பரத்தில் இருந்தும், வியாழக்கிழமையில் திருவனந்தபுரத்தில் இருந்தும் வாராந்திர ரயிலாக இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோயில் டவுன், குழித்துறை  ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 

தாம்பரத்தில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்படும் அம்ரித் பாரத் ரயில் மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். அதேசமயம் திருவனந்தபுரத்தில் இருந்து காலை 10.40க்கு புறப்படும் ரயில் இரவு 11.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயில் முழுக்க முழுக்க சாதாரண படுக்கை வசதி கொண்டது. இதனால் இந்த ரயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 11.45 மணிக்கு தாம்பரம் வருவது பெரும் சிக்கலாக அமைந்துள்ளது.இந்த கால அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, “பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள அம்ரித் பாரத் ரயிலானது நாகர்கோயில் மார்க்கத்தில் இரணியல் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் இரவு 11.45 மணிக்கு தாம்பரம் செல்வது பெரும் சிக்கலை உண்டாக்குகிறது. 

காரணம் அங்கிருந்து பயணிகள் தங்கள் இருப்பிடங்களுக்கு செல்ல போதுமான பேருந்து வசதி இல்லை. ஆட்டோ, கார் ஆகியவை வாடகை இரண்டு மடங்கு நள்ளிரவில் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்ற சிரமங்களை நாங்கள் எதிர்கொள்கிறோம். எனவே திருவனந்தபுரத்தில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 3.30க்கு புறப்பட்டால் அதிகாலை 4 மணிக்கு தாம்பரம் வந்தடையும். அந்த நேரத்தில் பொதுமக்கள் பொது போக்குவரத்தை அச்சமின்றி பயன்படுத்த முடியும். எனவே தயவு செய்து பயணிகள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்: 100 ரூபாய் பத்திரத்தில் அச்சிடப்பட்ட தவெக-வின் வாக்குறுதிகள்..!
விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்: 100 ரூபாய் பத்திரத்தில் அச்சிடப்பட்ட தவெக-வின் வாக்குறுதிகள்..!
‘வாயில் நுழையாத வட மொழி பெயர் ; வக்காலத்து வாங்கும் EPS’ கோபமான அமைச்சர் ஐ.பி..!
‘வாயில் நுழையாத வட மொழி பெயர்’ ஆவேசமான அமைச்சர் ஐ.பி..!
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance seat allocation : எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
iPhone 16 Huge Discount: ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Embed widget