மேலும் அறிய

நீதி கேட்டு போராடும் ஊராட்சி செயலாளர்கள்; அரசே துரோகம் செய்வதா? அன்புமணி கேள்வி

ஊராட்சி செயலாளர்களுக்கு திமுக அரசு துரோகம்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்! ஓய்வூதிய வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் கொந்தளிப்பு

நீதி கேட்டு போராடும் ஊராட்சி செயலாளர்களை பணி நீக்கி பழிவாங்குவதா  உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:

’’தமிழ்நாட்டில் ஊதிய விகிதத்திற்கு ஏற்ற வகையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராடிய ஊராட்சி செயலாளர்களுக்கு, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் துரோகம் செய்த திமுக அரசு, அவர்களை பழிவாங்கும் செயல்களையும் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. நீதி கேட்டு போராடியவர்களுக்கு அநீதியை பரிசளிப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் உள்ள கிராம ஊராட்சிகளில் 12,500க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் உள்ளனர். தொடக்கத்தில் குறைந்த ஊதியத்தில் ஒப்பந்தப் பணியாளர்களாக  நியமிக்கப்பட்ட அவர்கள், தொடர் போராட்டங்களுக்குப் பிறகு 2006-ஆம் ஆண்டில் ரூ.1,300 அடிப்படை ஊதியத்தில் பணி நிலைப்பு செய்யப்பட்டு 2018-ஆம் ஆண்டு முதல் ரூ.15,900 அடிப்படை ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.  ஆனால், அவர்கள் ஓய்வுபெற்ற பிறகு ரூ.2,000 மட்டுமே மாத ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இது எந்த வகையிலும் நியாயமல்ல.

காத்திருப்புப் போராட்டம்

இந்த நிலையை மாற்றி தங்களின் ஊதிய விகிதத்திற்கு ஏற்ற வகையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்; இதற்காக தமிழக அரசு அறிமுகம் செய்யவுள்ள தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் தங்களைச் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி ஆறாம் நாள் முதல் தொடர் விடுப்பு எடுத்ததுடன், சென்னையில் குவிந்து காத்திருப்புப் போராட்டமும் நடத்தினர்.

ஊராட்சி செயலாளர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை என்பதால், அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த மாதம் 11&ஆம் தேதி நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதைத்  தொடர்ந்து ஊராட்சி செயலாளர்களுடன் பேச்சு நடத்திய ஆட்சியாளர்கள், அவர்களும் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்தது. அதை நம்பி 8 நாள்களாக நடத்தி வந்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக ஜனவரி 13ஆம் தேதி ஊராட்சி செயலர்கள் அறிவித்தனர்.

ஆனால், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு, அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள் ஆகியோருக்கான ஓய்வூதியத்தை  ரூ.2000-ல் இருந்து ரூ.3400 ஆக உயர்த்தியதைப் போலவே ஊராட்சி செயலாளர்களுக்கும் உயர்த்தியது. இதன் மூலம் தாங்கள் ஏமாற்றப்பட்டதையும், தங்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டதையும் உணர்ந்த ஊராட்சி செயலாளர்கள் கடந்த 4ஆம் தேதி முதல் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். 12ஆம் நாளாக இன்றும் போராட்டம் தொடரும் நிலையில், அவர்களை அழைத்துப் பேசுவதற்கு தமிழக ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. மாறாக, உரிமைக்காக போராடுபவர்களை அடக்குமுறைகள் மூலம் பணியவைத்து விடலாம் என்று தப்புக்கணக்கு போட்டு பழிவாங்கிக் கொண்டிருக்கிறது.

600 பேர் ட்ரான்ஸ்ஃபர்

உரிமை கேட்டு போராடுவதற்காக 500க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்களை பணியிடை நீக்கம் செய்துள்ள திமுக அரசு, மேலும் 600க்கும் மேற்பட்டோரை ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கு பணியிட மாற்றம் செய்திருக்கிறது. ஆனால், இந்த பழிவாங்கலைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஊராட்சி செயலாளர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பா.ம.க. முழு ஆதரவைத் தெரிவிக்கிறது.

ஊராட்சி செயலாளர்களுக்கும், ஊராட்சி ஒன்றிய பதிவுறு எழுத்தர்களுக்கும் ஒரே அளவிலான ஊதியம் வழங்கப்படுகிறது. அதேபோல், அவர்கள் இருவருக்கும் ஒரே மாதிரியாக ஓய்வூதியம் வழங்குவது தான் நியாயமானதாக இருக்கும். பதிவுறு எழுத்தர்களுக்கு  அவர்களின் ஊதிய விகிதத்திற்கு ஏற்ற வகையில்  அரசு ஊழியர்களுக்கு  வழங்கப்படுவதைப் போன்ற ஓய்வூதியம் நடைமுறையில் உள்ளது. ஆனால், அதே ஊதிய விகிதம் பெறும் ஊராட்சி செயலாளர்களுக்கு தகுதிக்கேற்ற ஓய்வூதியம் வழங்க மறுப்பதும், அதே  ஓய்வூதியம் வழங்குவதாக வாக்குறுதி அளித்து விட்டு, அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்களுடன்  சேர்த்து ரூ.3400 மட்டும் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவிப்பதும் மன்னிக்க முடியாத துரோகம் ஆகும்.

ஊரக உள்ளாட்சிகளின் முதுகெலும்பாக  திகழ்பவர்கள் ஊராட்சி செயலாளர்கள்தான். அதிலும் குறிப்பாக தமிழகத்தின்  28 மாவட்டங்களில் ஊராட்சித் தலைவர்களின் பதவிக்காலம் நிறைவடைந்து விட்ட நிலையில், அனைத்துப் பணிகளையும் ஊராட்சி செயலாளர்கள் தான் கவனித்து வருகின்றனர். கடந்த 12 நாள்களாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஊராட்சிகளில் முக்கியமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பதிலாக அடக்குமுறைகள் மூலம் அவர்களை பணிய வைக்க திமுக அரசு முயல்வது தவறு; இது பயனளிக்காது.


பழி வாங்கும் போக்கு


எனவே, திமுக அரசு பழிவாங்கும் போக்கை கைவிட்டு, ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் ஊராட்சி ஒன்றிய பதிவுறு எழுத்தர்களுக்கு வழங்கப்படுவதைப் போல, தகுதிக்கேற்ற  உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். மேலும், பணியிடை நீக்கம், பணியிட மாற்றம் போன்ற ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்து, ஊராட்சி செயலர்களை ஏற்கனவே இருந்த இடத்திலேயே பணி செய்ய அரசு அனுமதிக்க வேண்டும்’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay in AIADMK alliance : ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
TNEB Salary Hike : அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
அவசரமாக பணம் தேவை !! காதலனுக்காக தாயின் கழுத்தை துப்பட்டாவால் நெறித்த மகள் !! நடந்தது என்ன ?
அவசரமாக பணம் தேவை !! காதலனுக்காக தாயின் கழுத்தை துப்பட்டாவால் நெறித்த மகள் !! நடந்தது என்ன ?
19 வயது இளம் பெண்ணுக்கு , காதல் டார்ச்சர் கொடுத்த 65 வயது முதியவர் !!
19 வயது இளம் பெண்ணுக்கு , காதல் டார்ச்சர் கொடுத்த 65 வயது முதியவர் !!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay in AIADMK alliance : ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
TNEB Salary Hike : அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
Chinmayi Sripaada: ”புரியவே புரியாதா?” - வைரமுத்துவை வாழ்த்திய ரஜினியை சாடிய சின்மயி!
Chinmayi Sripaada: ”புரியவே புரியாதா?” - வைரமுத்துவை வாழ்த்திய ரஜினியை சாடிய சின்மயி!
TVK Vijay: சரக்கு பாட்டிலால் விஜய் புறப்பட தாமதமா? உண்மையை உடைத்த சிடிஆர் நிர்மல்குமார்!
TVK Vijay: சரக்கு பாட்டிலால் விஜய் புறப்பட தாமதமா? உண்மையை உடைத்த சிடிஆர் நிர்மல்குமார்!
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
Electric Stove Subsidy : மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
Embed widget