கொங்குநாடு தீபாவளி திருவிழா 2025.. ஆண்ட்ரியா இசை முதல் மதுரை முத்து நகைச்சுவை வரை களைகட்ட போகும் கோவை..
கோவையில் வருகிற அக்டோபர் 25 மற்றும் 26, 2025, பல்லடம் கிளாசிக் சிட்டியில் “கொங்குநாடு தீபாவளி திருவிழா 2025” நடைபெற உள்ளது.

கோவை: வருகிற அக்டோபர் 25 மற்றும் 26, 2025, பல்லடம் கிளாசிக் சிட்டியில் “கொங்குநாடு தீபாவளி திருவிழா 2025” நடைபெற உள்ளது. இந்த விழாவில் இசை, நகைச்சுவை, கலாச்சாரம், உணவு, விளையாட்டு மற்றும் ஷாப்பிங் கடைகள் ஆகியவை ஒரே இடத்தில் இடம்பெறவுள்ளது.
விழாவின் சிறப்பம்சங்கள்
இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களில் ஒன்று, பிரபல நடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியா ஜெரேமியா இசை நிகழ்வு தனது இனிமையான குரலில் ரசிகர்களை மயக்கவுள்ளார்.
மதுரை முத்துவின் சிரிப்பு பட்டாசு:
தமிழ்நாட்டின் பிரபல நகைச்சுவை கலைஞர் மதுரை முத்து, தனது தனித்துவமான ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சியால் அரங்கினை சிரிப்பில் மூழ்கடிக்கவுள்ளார்.
சர்வதேச காத்தாடி திருவிழா:
முதன்முறையாக கோவையில் நடைபெறும் சர்வதேச காத்தாடி திருவிழா, வானத்தில் பறக்கும் வண்ணமயமான காத்தாடிகள் மூலம் வானத்தையும் உள்ளங்களையும் பண்டிகை நிறத்தில் மாற்றும். இவ்விழாவில் உலகம் முழுவதிலிருந்து வருகிற காத்தாடி ஆர்வலர்கள் பங்கேற்க உள்ளனர்.
கொங்குநாட்டு உணவு விழா – பாரம்பரிய சுவைகள்
திருவிழாவில் கொங்குநாட்டின் பாரம்பரிய உணவுகள் மற்றும் சிறப்பு தீபாவளி உணவுகள் விருந்தோம்பல் தரவுள்ளன. பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் வாணிக உணவுகள், இனிப்புகள், மற்றும் சிறப்பான மிட்டாய் வகைகள்
ஷாப்பிங் ஸ்டால்கள் – கைவினை & பிராண்டுகள்
திருவிழாவில் உள்ளூர் கைவினைப்பொருட்கள், பிரபல பிராண்டுகள் மற்றும் தனித்துவமான பொருட்கள் விற்பனைக்கு வரும். பாரம்பரிய கைவினை, ஆடை, ஒப்பந்தப் பொருட்கள், பொம்மைகள், உபகரணங்கள் போன்றவை குடும்பத்தினரைப் உள்ளூர் சந்தை சந்தை அனுபவத்தை அளிக்கும்
பண்டிகை உற்சாகத்தை மேலும் உயர்த்தும் வகையில், குழந்தைகளுக்கான விளையாட்டுகள், பொம்மைகள், மற்றும் சிறப்பு அலங்காரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீப ஒளிகள், வண்ணக் கதிர்கள் மற்றும் அலங்கார கலைப்பொருட்கள் மக்களை கவர உள்ளன
விழா ஏற்ப்பாட்டாளர்:
இந்த மாபெரும் திருவிழாவை நடத்துவது NV LANDS – ரியல் எஸ்டேட் மற்றும் சமூக மேம்பாட்டில் முன்னணி நிறுவனமாகும்.
நிறுவனம் பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் சமூகவாழ்வை முன்னிறுத்தி, அனைத்து குடும்பங்களுக்கும் இனிமையான அனுபவத்தை வழங்கும் நோக்குடன் விழாவை ஏற்பாடு செய்துள்ளது.
நடைப்பெறும் இடம் மற்றும் தேதி:
தேதி: அக்டோபர் 25 & 26, 2025
இடம்: பல்லடம் – கிளாசிக் சிட்டி, கோவை
உங்கள் குடும்பத்துடன் பல்லடம், கிளாசிக் சிட்டியில் கலந்துக்கொண்டு உங்கள் தீபாவளியை கோலாகலமாக்குங்கள்






















