ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் அதிமுகவில் இணைந்தார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சந்தித்து கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

Continues below advertisement

அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பி ஆக தேர்வான தர்மர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து வந்தார். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தர்மர் கடந்த 2022இல் மாநிலங்களவை எம்பி ஆனார். ஒற்றைத் தலைமை பிரச்னை தொடங்கியது முதல் ஓபிஎஸ்க்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின் ஓபிஎஸ் இடமிருந்து விலகி எடப்பாடி பழனிசாமியிடம் இணைந்துள்ளார். மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கத்தை தொடர்ந்து தர்மர் விலகியுள்ளது ஓபிஎஸ்க்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

பன்னீர்செல்வத்துடன் இருந்து மூன்று எம்எல்ஏக்களில் ஐயப்பன் மட்டுமே தற்போது அவருடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

ஜெயலலிதாவின் கனவை நனவாக்க பழனிசாமி தலைமையில் இணைந்ததாகவும், திமுக ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்பதால் இந்த முடிவை எடுத்ததாகவும், தனக்கு எந்த அழுத்தம் இல்லை, கருத்து வேறுபாடு இல்லை, சுயமாக சிந்தித்து இந்த முடிவை எடுத்ததாகவும் தர்மர் கூறியுள்ளார்.