OPS Case: நீதிபதியை மாற்ற சொல்வீங்களா? கடுப்பான நீதிபதி.. மன்னிப்புக் கேட்ட ஓபிஎஸ் தரப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி மறுப்பு தெரிவித்து தலைமை நீதிபதிக்கு மாற்றம் செய்தார்.

Continues below advertisement

அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதி மறுப்பு தெரிவித்து தலைமை நீதிபதிக்கு மாற்றம் செய்தார். இந்த வழக்கை யார் விசாரணை செய்வார் என்பதை தலைமை நீதிபதியே முடிவெடுப்பார் என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டார்.

Continues below advertisement

மேலும், நீதிபதியை மாற்றக்கோரிய வழக்கில் மன்னிப்பை மனுவாக தாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்பு மறுப்பு தெரிவித்திருந்தார். அதிமுக பொதுக்குழு வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நீதிபதியை மாற்றக்கோரிய வழக்கில் மன்னிப்பை மனுவாக தாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

 

அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரிக்கும் தன்னை மாற்ற வேண்டுமென தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பிய ஓபிஎஸ். தரப்புக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த கண்டனம் குறித்து தலைமை நீதிபதியிடம் ஓபிஎஸ் தரப்பு முறையிட்டுள்ளது.  

நடந்தது என்ன?

ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக்கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது  எனக் கூறி இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அ.தி.மு.க பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் எனவும், வழக்கை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமெனவும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நாளை பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, கடந்த ஜூலை 11ல் பிறப்பித்த உத்தரவில், பன்னீர்செல்வம் குறித்து தேவையில்லாத கருத்துக்களை தெரிவித்துள்ளதால்,  பொதுக்குழு தொடர்பான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தரப்பில் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரிக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணையை நாளை தள்ளிவைக்கும்படி வைரமுத்து தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று நாளை பிற்பகலுக்கு வழக்குகளை நீதிபதி தள்ளிவைத்தபோது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது நீதிபதி ஏன் என கேள்வி எழுப்பியபோது, ஓ.பி.எஸ். தரப்பில், ஜூலை 11ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் தனக்கு எதிரான கடுமையான கருத்துக்களை தெரிவித்துள்ளதாலும், பொதுக்குழு நடக்க இருந்த கடைசி நேரத்தில் உத்தரவு பிறப்பித்ததாலும், இந்த வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி தலைமை நீதிபதியிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஓ.பி.எஸ். தரப்பு விளக்கத்தால் அதிருப்தி அடைந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, நீதிபதியை மாற்ற வேண்டுமென தலைமை நீதிபதியிடம் புகார் அளித்தது குறித்து கடும் கண்டனம் தெரிவித்தார்.

நீதிபதி கோபம்..

இந்த நடவடிக்கை நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல் மட்டுமல்ல, கீழ்த்தரமான செயல்  எனவும் அதிருப்தியை பதிவு செய்த நீதிபதி, தீர்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாகவும், திருத்தம் இருந்தால் தன்னிடம் முறையீடு செய்திருக்கலாம் என்றும் தெரிவித்தார். மனுதாரர் (ஓ.பி.எஸ்.) குறித்து தன் உத்தரவில் குறிப்பிட்ட தனது கருத்துக்களை நியாயப்படுத்தும் வகையிலேயே தற்போதும் அவரது தரப்பு செயல்பாடு உள்ளதாகவும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இதற்கு வருத்தம் தெரிவித்த ஓபிஎஸ் தரப்பு, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் மன்னிப்பை மனுவாக தாக்கல் செய்ய மறுத்துவிட்டது. 

Continues below advertisement