நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத்தலம் திறந்திருக்கும் அனுமதி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலாத் தலங்களில் அனுமதி நேரத்தை குறைத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலை பரவத் தொடங்கியதை அடுத்து அந்தந்த மாநிலங்கள் மீண்டும் ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. ஊரடங்கு அறிவிப்பில் கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் 50 சதவீதம் வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்கள் காலை 10 மணி முதல் பகல் 3 வரை மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டதாவும், நாளை முதல் உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்காவுக்கு பகல் 3 மணி வரை மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் எனவும் ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார். மேலும் படிக்க: கோவையில் ஒரே நாளில் 408 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் இன்று 1,36,620 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 8,981ஆக உள்ளது. ஒருநாள் பாதிப்பு 6,983 ஆக இருந்த நிலையில் 1,998 அதிகரித்து 8,981 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 4,531 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 8 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 984 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க: சேலம் மாவட்டத்தில் ஒரேநாளில் 119 பேருக்கு கொரோனா பாதிப்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்