எல்லா விளையாட்டுகளிலும் சூதாட்டம் வந்துவிட்டது என ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்தது குறித்து நடிகர் சரத் குமார் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் சரத் குமார், ”ஆன்லைனில்தான் உலகமே இயங்கி கொண்டிருக்கிறது. ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்ததற்காக சரத் குமாரிடம் கேள்வி கேட்குறீர்கள். ஆபாச படமும் தான் ஆன்லைனில் வருகிறது. அதனால் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. அதை ஏன் தடை செய்யவில்லை. துபாயில் மூன்று முறைக்கு மேல் ஆபாச படத்தை பார்த்தால் ஐபி அட்ரஸை கண்டுபிடித்து கைது செய்துவிடுவார்கள். ஆன்லைனில் ரம்மி மட்டும் அல்ல. ஆன்லைன் கிரிக்கெட்டிலும் தான் இது நடக்கிறது. தோனியும் அதே விளம்பரத்தில் தானே நடிக்கிறார். 


ஆன்லைன் ரம்மி தவறு என்றால் அரசு தடை செய்ய வேண்டும். தனிநபரான சரத்குமாரை நடிக்காதே என்று சொல்லுவதில் எந்த பயனும் இல்லை. 






என் கிரெடிட் கார்டில் லிமிட் 10 லட்சம். நான் போய் ஆன்லைனில் விளையாடினால் 10 லட்சத்திற்கு மேல் என்னால் விளையாட முடியுமா..? அப்புறம் அவர்களும் லிமிட் தாண்டி விளையாடி தற்கொலை செய்து கொண்டார்கள். 


ரம்மி விளையாட்டு அனைத்தும் அறிவுபூர்வமான விளையாட்டு. இது அனைவராலும் விளையாட முடியாது. சரத் குமார் நடித்ததால் சொல்லவில்லை. நிஜமாகவே ரம்மி விளையாட அறிவு வேண்டும். 


எந்த விஷயமாக இருந்தாலும் வேண்டாம் என்று நினைத்தால், அதை யாரும் செய்ய மாட்டார்கள். வாக்கு செலுத்துங்கள் என்று மக்களிடம் சொல்லுகிறேன். மக்கள் அனைவரும் ஓட்டு போட்டார்களா..? வாக்கு செலுத்த பணம் வாங்குவது தவறில்லை, ரம்மிளையாடுவது தவறா..? முதலமைச்சர் செல்லும்போது உடனே செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கான்வாய் வாகனத்தில் ஏறினார் சென்னை மேயர் பிரியா அதில் என்ன தவறு உள்ளது என்று சரத்குமார் கேள்வி எழுப்பினார். 






தொடர்ந்து, அவரச சட்டம் வருவதற்கு முன்பு நான் விளம்பரத்தில் நடித்திருந்தேன். அவசர சட்டம் முதலில் கொண்டு வந்திருந்தால் விளம்பரத்தில் நடித்திருக்க மாட்டேன்” என பேசியிருந்தார்.