சேலம் மாவட்டம் காந்தி ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கத்தின் முதல் மாநில மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன், அகில பாரத ஆதிவக்த பரிஷத்யின் தலைவர் ராஜேந்திரன், சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும் இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி சுவாமிநாதன் பேசும்போது, திறமையும், உழைப்பும் இருந்தால் வழக்கறிஞர் தொழிலில் வெற்றி பெறலாம் என்றும் மூத்த நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் நீதிமன்றத்தில் எவ்வாறு வாதம் செய்கின்றனர் என ஆராய்ந்து செயல்பட்டால் நிச்சயம் இளைய வழக்கறிஞர்கள் வெற்றி பெற முடியும் என தெரிவித்தார்.



இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் பேசும் போது,  வழக்கறிஞர்கள் தொழில் உன்னதமான தொழில். அவற்றை முறையாக செயலாற்ற வேண்டும் நீதித்துறை மீது வைத்துள்ள நம்பிக்கை மாறிவிடக் கூடாது என்றும் தெரிவித்தார். அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம் கடந்த 13 ஆண்டு காலமாக செயல்பட்டு வருவது பெருமைக்குரிய விஷயமாகும் எனவும், நீதிமன்றங்களில் தற்போது அதிநவீன தொழில்நுட்பங்கள் அதிக அளவில் வந்துள்ளதால் வழக்குகளை விரைந்து முடிக்க வசதிகள் வந்துள்ளது. இப்போது உள்ள இளைய வழக்கறிஞர்கள் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விரைந்து வழக்குகளை முடிக்க முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 272 நீதிபதிகள் உட்பட 5649 நீதிமன்ற ஊழியர்களின் காலிப் பணியிடங்கள் உள்ளது. அதனை விரைந்து நிரப்பிடமாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். 



தொடர்ந்து பேசிய அவர், பாகப்பிரிவினை வழக்கில் கூட 15 ஆண்டுகளாக தீர்ப்பு வழங்கப்படாமல் உள்ள நிலை நீடித்து வருகிறது. எனவே வழக்குகளை நிறைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நீண்ட வருடங்களாக இருக்க கூடிய வழக்குகளை விரைந்து முடிக்க லோக் அதாலக் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தி வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஒவ்வொரு மாதமும் மாவட்டந்தோறும் சென்று மாவட்ட நீதிபதி மற்றும் நீதிபதிகள் வழக்கறிஞர்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து தேவையானவற்றை நிறைவேற்றிட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கருணை மனு ஏழு ஆண்டுகளாக உள்துறை அமைச்சகத்திடமே இருந்தது. உரிய நேரத்தில் முறையான பதில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாததால் ராஜூவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பின் அடிப்படையிலேயே தற்போது 7 பேருக்கும் விடுதலை கிடைத்துள்ளது எனக்கும் தெரிவித்தார். இந்த மாநாட்டில் மூத்த வழக்கறிஞர்கள் மூத்த நிர்வாகிகள் அகில பாரத வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.