Perarivalan Case Updates LIVE : எங்களின் 31 ஆண்டுகால போராட்டத்தை நீங்கள் அறிவீர்கள் - அற்புதம்மாள்
Perarivalan pardon case Live Updates: பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. தீர்ப்பின் விவரம் உடனுக்குடன்...
ஆயுள்தண்டனையைக் காட்டிலும் நீண்ட 31 ஆண்டுகள். இப்போதேனும் முடிந்ததே என மகிழ்கிறோம். பேரறிவாளனுக்கான அநீதியில் அரசுகள் பந்து விளையாடிய சூழலில், நீதிமன்றமே முன்வந்து விடுதலை செய்திருக்கிறது. வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும் - கமல்ஹாசன்
வரலாற்றுத் தீர்ப்பு.. அவரது விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது - முதலமைச்சர் ஸ்டாலின்
மாக்சிம் கார்க்கியின் தாய் நாவலை 4 முறை படித்துள்ளேன் - ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு உணர்வை எனக்கு கொடுத்துள்ளது
எனக்கு வயதாக வயதாக, அம்மா உயிருடன் இருக்கும் போதே என் விடுதலையை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் உண்டு - பேரறிவாளன்
என் பக்கம் நியாயம் இருந்தது. அது தான் போராடும் வலிமையை எனக்கும் என் அம்மாவுக்கும் தந்தது -பேரறிவாளன்
நான் ஒவ்வொரு முறையும் தோய்வில்லாத சட்டபோராட்டத்தில் வீழ்ந்தபோதெல்லாம் என் அம்மாவை பார்க்க நான் அஞ்சி உள்ளேன்
அம்மாவின் தனிவாழ்கையை திருடிவிட்டேன் என்ற வேதனை எனக்குள் இருந்தது
எனக்கு வயதாக வயதாக அவர்கள் உயிருடன் இருக்கும் போதே என் விடுதலையை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் உண்டு
என் அம்மாவின் தியாகம், போராட்டம், நிறைய அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் வேதனை வலிகளையும் எனது தாயார் சந்தித்துள்ளார்
பேரறிவாளன் விடுதலை தீர்ப்பை அறிந்து அவரது தாயார் அற்புதம்மாள், உறவினர்கள் ஆனந்த கண்ணீர்
மாநில அரசு முழுமையாக ஆராய்ந்த பிறகே பேரறிவாளனை விடுவிக்கும் முடிவை எடுத்தது உச்சநீதிமன்றம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை.. உச்சநீதிமன்றம் அதிரடி..
ஜாமினில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம்
பேரறிவாளனின் மனுவை விசாரித்த நீதிபதி நாகேஸ்வர ராவின் தலைமையினான அமர்வு தீர்ப்பை வாசிக்க தொடங்கியது
பேரறிவாளன் வழக்கு : விடுதலை செய்யக்கோரும் வழக்கில் தீர்ப்பளிக்க நீதிபதிகள் வருகை..
மத்திய அரசு முடிவு எடுக்கவில்லை என்றால் நாங்கள் முடிவெடுக்க வேண்டியிருக்கும் என்று கூறியதோடு, குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிய ஆவணங்களை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தனர். அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
கடந்த வாதங்களின் போது, பேரறிவாளன் விவகாரத்தில் மத்திய அரசு அக்கறைக் காட்டவில்லை என்று குற்றம்சாட்டிய நீதிபதிகள் 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள பேரறிவாளனின் நன்னடத்தை, உடல்நிலை, அதிகாரப் பிரச்சனையை கருத்தில் கொண்டு பேரறிவாளனை ஏன் விடுதலை செய்யக்கூடாது? என்று கேள்வி எழுப்பியது
இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது
முன்னதாக, இந்த வழக்கு கடந்த 11ம் தேதி விசாரணைக்கு வந்தபோது தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
முன்னதாக, இந்த வழக்கு கடந்த 11ம் தேதி விசாரணைக்கு வந்தபோது தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
பேரறிவாளனை விடுவிக்கும் அதிகாருக்கும் யாருக்கு உண்டு என உச்ச நீதிமன்றத்தில் கடும் விவாதங்கள் நடந்தன
விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் மத்திய மாநில அரசுகள் எழுத்துப்பூர்வமாக வாதத்தை உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்திருந்தன
Background
தன்னை விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்குகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -