ஆம்னி பேருந்து:


ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜய தசமி என 4 நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர். இதற்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சிறப்பு பேருந்துகளில் டிக்கெட் இல்லாத காரணத்தால் ஆம்னி பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டது. எப்போதுமே ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில், கடந்த சனிக்கிழமையன்று அரசு சார்பில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 


அதில் பலரும் கூடுதல் கட்டணம் வசூலித்தது தெரிய வந்தது. அப்படி வசூல் செய்த ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல் விதிமீறலில் ஈடுபட்ட 120 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு இல்லாமல், ரூ.37 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.  இதனை அடுத்து, ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்ததை கண்டித்து இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.


கட்டண விவரம் வெளியீடு:


இதனை அடுத்து, ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்ததை கண்டித்து இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இதனால், ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்புடன் தமிழ்நாடு போக்குவரத்து தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. போக்குவரத்து துறை அமைமைச்சர் சிவசங்கருடன் நடந்த  பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்ட நிலையில் இந்த போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில், சென்னையில் இருந்து செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கான அதிகாரப்பூர்வ கட்டண விவரத்தை ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. 


இந்த புதிய கட்டணம் பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இருந்த கட்டணத்தை விட கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பேருந்துகளில் சென்னையில் இருந்து நெல்லைக்கு தோராயமாக ரூ.800 ஆக டிக்கெட் விலை உள்ள நிலையில், ஆம்னி பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணமே ரூ.2,380 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


டிக்கெட் விலை எவ்வளவு?



  • அதன்படி, சென்னையில் இருந்து திருச்சிக்கு குறைந்தபட்சம் ரூ.1,610, அதிகபட்ச கட்டணம் ரூ.2,430 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • சென்னையில் இருந்து கோவைக்கு குறைந்தபட்ச  கட்டணம் 2,050 ரூபாயும், அதிகபட்ச கட்டணம் 3,310 ரூபாயாக உள்ளது. 

  • சென்னையில் இருந்து மதுரைக்கு குறைந்தபட்ச கட்டணம் 1,930 ரூபாயும், அதிகபட்ச கட்டணம் 3,070 ரூபாயாக உள்ளது. 

  • சென்னையில் இருந்து நெல்லைக்கு குறைந்தபட்ச கட்டணம் 2,380 ரூபாயும், அதிகபட்ச கட்டணம் 3,920 ரூபாயாக உள்ளது. 

  • சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு குறைந்தபட்ச கட்டணம் 2,320 ரூபாயும், அதிகபட்ச கட்டணம் 3,810 ரூபாயாகவும் உள்ளது. 

  • சென்னையில் இருந்து நாகர்கோயிலுக்கு குறைந்தபட்ச கட்டணம் 2,610 ரூபாயும், அதிகபட்ச கட்டணம் 4,340 ரூபாயாக உள்ளது. 

  • சென்னையில் இருந்து சேலத்திற்கு குறைந்தபட்ச கட்டணம் 1,650 ரூபாயும், அதிகபட்ச கட்டணம் 2,500 ரூபாயாகவும் உள்ளது. 

  • சென்னையில் இருந்து தஞ்சைக்கு 1,650 ரூபாயும், அதிகபட்ச கட்டணம் 2,500 ரூபாயாகவும் உள்ளது. 


இதில் குறைந்தபட்ச கட்டணம் என்பது குளிர்சாதன வதி இல்லாத இருக்கை வசதி கொண்ட பேருந்துகளுக்கான கட்டணம், அதிகபட்ச கட்டணம் படுக்கை வசதி கொண்ட சொகுசு பேருந்துகளுக்கான கட்டணம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.