அதி அழுத்த பிராணவாயு சிகிச்சை
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதிஅழுத்த பிராணவாயு சிகிச்சை (Hyperbaric Oxygen Therapy - HBOT) மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் திறந்து வைத்தார்.
இந்த சிகிச்சை முறையில், அதிக அழுத்தத்தில் தூய ஆக்சிஜனை நோயாளிகள் சுவாசிக்கும் வகையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் சக்கரை நோயால் ரணங்கள் விரைவாக ஆறுதல், தீக்காயங்கள், கடுமையான தொற்றுகள் மற்றும் விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிறப்பான சிகிச்சை வழங்க முடியும்.சுமார் ரூ.2 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள இந்த அதிநவீன கருவி இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
தமிழகத்தின் மூன்று இடங்களில் இந்த கருவி உள்ளது. ஒன்று கோயம்புத்தூர் , கே.எம்.சி மருத்துவமனை , ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் துவங்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைக்கு சுமார் ரூ.1 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் , ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் இந்த சிகிச்சை முற்றிலும் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த புதிய வசதியால், உயர்தர மருத்துவச் சிகிச்சையை ஏழை மற்றும் நடுத்தர மக்களும் எந்தச் செலவுமின்றி பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அருண் ராஜ் ;
அதிக அழுத்தத்தில் தூய ஆக்சிஜனை நோயாளிகள் சுவாசிக்கும் வகையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் சக்கரை நோயால் ரணங்கள் விரைவாக ஆறுதல் , தீக்காயங்கள் , கடுமையான தொற்றுகள் மற்றும் விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிறப்பான சிகிச்சை வழங்க முடியும்.
சுமார் ரூ.2 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள இந்த அதிநவீன கருவி இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தக் கருவி தீராத புண் , சர்க்கரை வியாதி , வெரிகோஸ் போன்ற நோய்கள் இந்த கருவியின் மூலம் குணப்படுத்தலாம்.
தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் மட்டும் தான் இருக்கிறது. சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனை , கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை , தற்பொழுது ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மட்டும் இந்த கருவி உள்ளது. அடுத்ததாக சிவகாசியில் இந்த அதி அழுத்த பிராணவாயு சிகிச்சை கருவி கொண்டு வர இருக்கிறோம்.
பிரசவ வார்டுகளில் லஞ்சம்
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டேன். நோயாளிகளிடம் பணம் வசூலிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகள் வந்தது. அரசு மருத்துவமனைக்கு வரக் கூடிய நோயாளிகளிடம் பணம் வாங்கக் கூடாது என்று அறிவுறுத்தல் கொடுத்திருக்கிறோம். இது குறித்து அனைத்து அதிகாரிகளிடமும் தெரிவித்திருக்கிறோம். குறிப்பாக பிரசவ வார்டுகளில் பணம் வாங்குகின்றனர்.
அதன் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேரை சஸ்பெண்ட் செய்திருக்கிறோம். அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் பணம் கேட்டால் 104 என்ற எண்ணிற்கு நீங்கள் புகார் தெரிவிக்கலாம்.
குழந்தைகளுக்கு வழங்கும் பாரசிட்டமால் மருந்தில் 95 சதவீதம் ஆல்கஹால் இருப்பதாக வெளியானது கேள்விக்கு
ஏற்கனவே இது சம்பந்தமாக விளக்கத்தை நாங்கள் கொடுத்துள்ளோம் எந்த மருந்து இருந்தாலும் சிறிதளவு ஆல்கஹால் கலந்திருக்கும். அந்த மருந்தில்.95 சதவீதம் மருந்தில் கலக்கப்படவில்லை , எவ்வளவு ஆல்கஹால் கலக்க வேண்டுமோ அது மட்டும் தான் கலந்துள்ளது.
தமிழ்நாடு மருந்தக ஆய்வு மூலமாக பெறப்படக் கூடிய அனைத்து மருந்தையும் ஆய்வு மேற்கொண்ட பிறகு தான் மக்கள் பயன்பாட்டிற்கு அனுப்பப்படுகிறது. அதனால் இந்த பாரசிட்டமால் மருந்தில் எந்தவித தவறும் இல்லை அதை ஆய்வு மேற்கொண்ட பிறகு தான் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மருத்துவக் கல்லூரியில் இந்தாண்டு எத்தனை இடங்கள் உள்ளது என்ற குறிக்கான கேள்விக்கு ?
இந்த ஆண்டு 13,999 மருத்துவக் இடங்கள் உள்ளது. கூடுதலாக 950 இடங்கள் கிடைத்துள்ளது அரசு மருத்துவமனையில் மட்டும் 150 இடங்களும் தனியார் மருத்துவமனையில் 800 இடங்களும் ஜூலை 23 - ம் தேதி விண்ணப்பங்கள் அளிப்பது இறுதி நாளாக உள்ளது.
