மெட்ரோ ரயில் விரிவாக்கப்  பணிகளுக்காக ஆழ்வர்பேட்டையில் உள்ள நடிகர் கமலஹாசன் வீட்டிற்கு மெட்ரோ ரயில் நிர்வாகம்  நோட்டீஸ்  கொடுத்துள்ளது.  170 சதுரஅடி நிலம் தேவைப்படுவதால் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் வீட்டிற்கு மெட்ரோ நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்துள்ளது. 


நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவராக இருப்பவர் நடிகர் கமலஹாசன். இவருக்குச் சொந்தமான வீடு ஒன்று ஆழ்வார்ப்பேட்டையின் முக்கியச் சாலையில் உள்ளது. தற்போது இவரது இந்த வீட்டிற்கு ஒரு நெருக்கடியும், கமலஹாசனின் மக்கள் நல நல்லெண்ணத்திற்கான சோதனையும் ஒரு சேர வந்துள்ளது. அதாவது கமலஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸின் அலுவலகமாகவும் இது செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையின் பொது போக்குவரத்தில் புதிய அத்தியாயமாக கருதப்படும் மெட்ரோ ரயில் சேவை, சென்னையின் பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் முயற்சியாக 61 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரயில் விரிவாக்கப்பணிகள் சென்னை முழுவதும் நடந்து வருகின்றன.  இதன் ஒரு பகுதியாக சென்னை கங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக சென்னை முழுவதும் நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலஹாசனுக்குச் சொந்தமான ஆழ்வார்ப்பேட்டை வீட்டுக்கு உட்பட்ட பகுதியில், 170 சதுரஅடி அளவிலான நிலம்  பாலம் கட்ட தேவைப்படுவதால், நிலத்தினை கையகப்படுத்த கமலஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு கமலஹாசன் தரப்பில் இருந்து இன்னும் எந்தவிதமான 


ஏற்கனவே சென்னை முழுவதும் தொடர் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கக மத்திய மாநில அரசுகள், புதிய புதிய தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் அமைத்து வருகின்றது. சாலைகள் அதிகமாக அதிகமாக, சென்னையின் பரப்பும்,  பரபரப்பும் அதிகமாகிக் கொண்டே போகிறது. சாலைகள் இல்லாமல், லோக்கல் டிரைன்களும் தொடர்ந்து இயக்கப்பட்டுக் கொண்டு வருகிறது. இதில் மெட்ரோ ரயில் இணைந்த பிறகு மக்கள் பயன்பாடு அதிகமாகி இருக்கிறதே தவிர, சென்னையின் பரபரப்பு குறைந்த பாடில்லை.  இந்நிலையில் கமலுக்கு அனுப்பப்பட்டிருக்கும் நோட்டீஸ் அரசியல் வட்டாரத்தில் மட்டுமில்லாது கோலிவுட் வட்டாரத்திலும் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண