North Indian Labourers: வடமாநில தொழிலாளர் விவகாரம்: 3 பேர் மீது எஃப்.ஐ.ஆர்.. தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை

வடமாநில தொழிலாளர்கள் குறித்து தவறான தகவல்கள் பரப்பிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

வடமாநில தொழிலாளர்கள் குறித்து தவறான தகவல்கள் பரப்பிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

Continues below advertisement

இது தொடர்பாக யார்யார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து காவல் துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் “புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல் இணையதளத்திலும், சமூக ஊடகங்களிலும் விஷமிகள் சிலரால் பரப்பப்பட்டுள்ளது.  அப்படி பொய் செய்தி பரப்பியவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் அந்த அறிக்கையில் “ இது தொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153(A), 505(ix(b) கீழ் தெய்னிக் பாஸ்கர் பத்திரிக்கையின் ஆசிரியர் மீது ஒரு வழக்கும், திருப்பூர் மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 153(B), 505(ii)(b) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டபிரிவு 56(D) கீழ் தன்வீர் போஸ்ட் என்ற பத்திரிகையின் உரிமையாளர் முகமது தன்வீர் என்பவர் மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், ”தூத்துக்குடி மாவட்டம் செண்ட்ரல் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153, 153(A), 504, 505(1)(b), 505(1)(c), 505(2) கீழ் பிரசாந்த் உமராவ் என்பவர் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள இவர்களை கைது செய்ய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் உத்தரின் பேரில் தனி படைஅமைக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், அந்த அறிக்கையில் ”தமிழ்நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் இன்றி முழு பாதுகாப்புடன் அமைதியாக வசித்து வருகிறார்கள். அமைதியை சீர்குலைத்து பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பொய் செய்திகளை பரப்புவோர் பற்றிய விவரங்கள் காவல்துறையினரால் சேகரிக்கப்பட்டு வருகிறது. காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என்பது இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

Continues below advertisement