கரூரில் நேற்று இடைவிடாது பெய்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கரூரில் 10 மணி நேரத்தில் 42.20 மில்லி மீட்டர் மழை பெய்தது. வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை கடலோர பகுதிகளில் தொடர்வதால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று காலை 7:00 மணி முதல் கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் கனமழை பெய்தது.
குறிப்பாக கரூர் டவுன், திருமாநிலையூர், பசுபதிபாளையம், தான்தோன்றிமலை, காந்தி கிராமம், மன்மங்கலம், வாங்கல், வெங்கமேடு, ராயனூர் செல்லாண்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்தது. இதே போல் குளித்தலை,, கிருஷ்ணராயபுரம், தோகைமலை, புகலூர் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் மழை பெய்தது. இதன் காரணமாக பள்ளி , கல்லூரி கலெக்டர் பிரபு சங்கர் நேற்று விடுமுறை அளித்தார். அந்த விடுமுறை இன்றும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மழையால் மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் பெய்த சராசரி மழை அளவு.
மாவட்டத்தில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பெய்த மழை அளவு கரூர் 42.20 அரவக்குறிச்சி 39, அணைப்பாளையம் 36.20, கா. பரமத்தி 37. 60, குளித்தலை 27.30, தோகைமலை17, கிருஷ்ணராயபுரம் 34, மாயனூர் 34, பஞ்சப்பட்டி 17.60, கடவூர் 11.50, பாலவிடுதி 14.90, மைலம்பட்டி 37.40, ஆகிய அளவுகளில் மழை பெய்தது.மாவட்டம் முழுவதும் சராசரியாக 29.06 மில்லிமீட்டர் மழை பதிவானது. மாவட்டம் முழுவதும் மழையால் மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது..