மேலும் அறிய

நன்றி மறந்த என்எல்சி; 347 தொழிலாளர்கள் டிஸ்மிஸ்: 713 பேரை நீக்கத் திட்டம்- அரசு உடனே தலையிடக் கோரிக்கை!

என்.எல்.சி நிறுவனத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் தொழிலாளர்களை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பணி நீக்கம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது- அன்புமணி.

என்எல்சியில் 347 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதோடு, மேலும் 713 பேரை நீக்கத் திட்டமிட்டுள்ளதால் தமிழக அரசு தலையிட்டு பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றுபா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:

’’நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்தின் 1, 1ஏ, 2 ஆகிய நிலக்கரி சுரங்கங்களின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்த 347 ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அடுத்த சில வாரங்களில் மேலும் 713 பேரை பணி நீக்கம் செய்ய என்.எல்.சி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. என்.எல்.சி நிறுவனத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் தொழிலாளர்களை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பணி நீக்கம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

11 ஒப்பந்தங்கள் ரத்து

என்.எல்.சி நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தங்களை என்.எல்.சி நிறுவனம் ஒன்றன் பின் ஒன்றாக ரத்து செய்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை 6 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த 11 ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு விட்டன. அதன் காரணமாக 347 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.  நாளை, செப்டம்பர் 3-ஆம் தேதி இரு நிறுவனங்களின் இரு ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு 64 பேர் பணி நீக்கப்படவுள்ளனர்.  

நவம்பர் 16 ஆம்  தேதி வரை மொத்தம் 13 நிறுவனங்களின் 27 ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு மொத்தம்  1060 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளனர். அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டால், அவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து  வறுமையில் வாடும் நிலை உருவாகும்.  என்.எல்.சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிலைப்பு செய்யப்பட்டால் அவர்களுக்கு இந்த நிலை நேராது.  வட இந்தியர்களை நிரந்தரப் பணிகளில் அமர்த்தும் என்.எல்.சி நிறுவனம் தமிழர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாக மட்டுமே அமர்த்தி கொத்தடிமைகளாக நடத்துகிறது.

என்.எல்.சி நிறுவனம் நிலக்கரியை வெட்டி எடுத்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடிகளை லாபமாக ஈட்டி வருகிறது. அதற்கு அடிப்படை நிலங்கள்தான். ஆனால், என்.எல்.சி  நிறுவனத்திற்கு கோடிகளைக் கொட்டிக் கொடுக்கும் அந்த நிலங்களை வழங்கியவர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை. என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் 1827 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது.

வட இந்தியர்களுக்கு நிரந்தர வேலைகள்

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 25 ஆயிரம் குடும்பங்கள் மொத்தம் 37,256 ஏக்கர் நிலங்களை வழங்கியுள்ளன. அவற்றில் 23 ஆயிரத்திற்கும் கூடுதலான குடும்பங்களுக்கு இன்னும் வேலை வழங்கப்படாத நிலையில், நிலமே வழங்காத வட இந்தியர்களுக்கு நிரந்தர வேலைகள் வழங்கப்பட்டுள்ளன.  நிலம் கொடுத்த மக்களுக்கு வேலை கூட வழங்காமல் நன்றி மறந்த துரோக நிறுவனமாகவே என்.எல்.சி நிறுவனம் செயல்பட்டு வருவதற்கு இதுவே சான்றாகும். இது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தான் என்.எல்.சி நிறுவனம் தமிழ்நாட்டுக்கு தேவையில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி கூறி வருகிறது.

என்.எல்.சி நிறுவனத்தின் இந்த அத்துமீறல்களையும், துரோகங்களையும் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு  பணி நீக்கப்பட்ட ஒப்பந்தத்  தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கச் செய்ய வேண்டும். அங்கு பணியாற்றி வரும் தற்காலிக, ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிலைப்பு செய்வதற்காக  சிறப்புத் திட்டம் ஒன்றை உருவாக்கி  செயல்படுத்தும்படியும் என்.எல்.சி நிறுவனத்திற்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்’’ என்று அன்புமணி தெரிவித்துள்ளார். 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

என்.எல்.சி பணி நீக்கம்: 1060 தமிழர்களின் வாழ்வாதாரம் காக்க தமிழக அரசு தலையிட அன்புமணி வலியுறுத்தல்
என்.எல்.சி பணி நீக்கம்: 1060 தமிழர்களின் வாழ்வாதாரம் காக்க தமிழக அரசு தலையிட அன்புமணி வலியுறுத்தல்
நன்றி மறந்த என்எல்சி; 347 தொழிலாளர்கள் டிஸ்மிஸ்: 713 பேரை நீக்கத் திட்டம்- அரசு உடனே தலையிடக் கோரிக்கை!
நன்றி மறந்த என்எல்சி; 347 தொழிலாளர்கள் டிஸ்மிஸ்: 713 பேரை நீக்கத் திட்டம்- அரசு உடனே தலையிடக் கோரிக்கை!
நாடு முழுவதும் சர்க்கரை தட்டுப்பாட்டுக்கு மத்தியில் படாளம்ஆலை மூடல்? 30,000 விவசாயிகள் கவலை
நாடு முழுவதும் சர்க்கரை தட்டுப்பாட்டுக்கு மத்தியில் படாளம்ஆலை மூடல்? 30,000 விவசாயிகள் கவலை
விஜய் தான் அடுத்த PM.! அப்போ ராகுல் காந்தி.? ஜோதிடம் கணித்த கனிமொழி MLA- என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
விஜய் தான் அடுத்த PM.! அப்போ ராகுல் காந்தி.? ஜோதிடம் கணித்த கனிமொழி MLA- என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் தான் அடுத்த PM.! அப்போ ராகுல் காந்தி.? ஜோதிடம் கணித்த கனிமொழி MLA- என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
விஜய் தான் அடுத்த PM.! அப்போ ராகுல் காந்தி.? ஜோதிடம் கணித்த கனிமொழி MLA- என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
Esakki Subaya: தவெகவுடன் மனக்கசப்பா?.. MLA பதவியை மீண்டும் கேட்கும் இசக்கி சுப்பையா.. காரணம் இதுதான்!
Esakki Subaya: தவெகவுடன் மனக்கசப்பா?.. MLA பதவியை மீண்டும் கேட்கும் இசக்கி சுப்பையா.. காரணம் இதுதான்!
நாடு முழுவதும் சர்க்கரை தட்டுப்பாட்டுக்கு மத்தியில் படாளம்ஆலை மூடல்? 30,000 விவசாயிகள் கவலை
நாடு முழுவதும் சர்க்கரை தட்டுப்பாட்டுக்கு மத்தியில் படாளம்ஆலை மூடல்? 30,000 விவசாயிகள் கவலை
TN Weather News: ரைட்டு..! 16 மாவட்டங்களில் இன்று கனமழையா? சென்னை எப்படி? தமிழக வானிலை அறிக்கை
ரைட்டு..! 16 மாவட்டங்களில் இன்று கனமழையா? சென்னை எப்படி? தமிழக வானிலை அறிக்கை
LK Sudhish: பிரதமர் வேட்பாளரா?.. தமிழ்நாடு தாண்டினால் விஜயை தெரியுமா?.. விளாசிய எல்.கே.சுதீஷ்!
LK Sudhish: பிரதமர் வேட்பாளரா?.. தமிழ்நாடு தாண்டினால் விஜயை தெரியுமா?.. விளாசிய எல்.கே.சுதீஷ்!
Best SUV: வாழ்க்கை முழுமைக்கும் ஒரே பெஸ்ட் காரை ஓட்டனுமா? உங்களுக்கான சிறந்த மாடல்கள் - டாப் 5 சாய்ஸ் இதோ
வாழ்க்கை முழுமைக்கும் ஒரே பெஸ்ட் காரை ஓட்டனுமா? உங்களுக்கான சிறந்த SUV-க்கள் - டாப் 5 சாய்ஸ் இதோ
Strike At Wedding: திருமண வீட்டில் திடீர் தாக்குதல்..! குழந்தை உட்பட 5 பேர் மரணம், 50 பேர் காயம் - நடந்தது என்ன?
திருமண வீட்டில் திடீர் தாக்குதல்..! குழந்தை உட்பட 5 பேர் மரணம், 50 பேர் காயம் - நடந்தது என்ன?
GOLD RATE TODAY : நகைப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! இன்று சரசரவென குறைந்த தங்கம் விலை- ஒரு சவரனுக்கே இவ்வளவா.!!
நகைப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! இன்று சரசரவென குறைந்த தங்கம் விலை- ஒரு சவரனுக்கே இவ்வளவா.!!
Embed widget