விழுப்புரம்: விக்கிரவாண்டி சுங்கசாவடியில் இலகுரக வாகனங்கள், ஆண்டு சந்தா 3,000 ரூபாய் செலுத்தி, 200 முறை இந்தியாவில் உள்ள டோல்கேட்களை கடந்து செல்லலாம் என NHAI தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

Continues below advertisement

ஆண்டு சந்தா  3,000 ரூபாய் செலுத்தி, 200 முறை பயணிக்கலாம்

NHAI மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், அடுத்த மாதம், 15ம் தேதி சுதந்திர தினம் முதல் புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இதன்படி, நாடு முழுதும் உள்ள சுங்கச்சாவடிகளில், கார், ஜீப், வேன் போன்ற இலகு ரக வாகனங்கள் 3,000 ரூபாய், இ - பாஸ்டேக்கில் FASTAG செலுத்தி பாஸ் பெற்று விட்டால், ஒரு ஆண்டு அல்லது, 200 முறை சுங்கச்சாவடிகளை கடந்து செல்லலாம்.

இந்த வருடாந்திர பாஸ் அறிமுகத்தின் மூலம், தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக பயணம் மேற்கொள்பவர்கள் பயண கட்டணங்களில் சேமிப்பு மற்றும் எளிய முறையிலான FASTAG பாஸ்டேக் ரீசார்ஜ் மூலம் பயனடைய முடியும். உதாரணமாக இத்திட்டத்தில், சென்னையிலிருந்து பெங்களூரு வரைஒரு முறை செல்ல ஆறு இடங்களில் மொத்தம், 445 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அப்படி மாதம் இரு முறை பயணித்தால் ஆண்டுக்கு ரூ. 10,680  செலுத்த நேரிடும்.

Continues below advertisement

புதிய திட்டத்தால் கூடுதலாக பயணிக்கலாம்

இந்த புதிய வருடாந்திர பாஸ் மூலம் கூடுதலாக, 56 முறை கட்டண மையங்களை கடக்கவும் மற்றும், 7,680 ரூபாய் வரை பணம் சேமிக்கவும் முடிகிறது. அதே போன்று சென்னையிலிருந்து திருச்சி செல்லும் வாகனங்கள் ஏழு கட்டண மையங்களில் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலை உள்ளது. புதிய திட்டத்தால் கூடுதலாக, 32 முறை சுங்கச்சாவடிகளை கடக்கவும், 8,880 ரூபாய் வரை சேமிக்கவும் முடியும்.

ராஜ்மார்க் யாத்ரா மொபைல் செயலி மூலம் பணம் செலுத்தலாம்

வருடாந்திர பாஸ் மூலம் கட்டணத்தை ராஜ்மார்க் யாத்ரா மொபைல் செயலி மற்றும் NHAI நகாய் இணையதளத்தில் மட்டுமே செலுத்த முடியும். இந்த வருடாந்திர பாஸ், வாகனம் மற்றும் தொடர்புடைய பாஸ்டேக்கின் தகுதி வாகனத்தின் முகப்பு கண்ணாடியில் சரியாக ஒட்டியும், சரியான வாகன எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டிருக்க கூடாது. சரி பார்க்கப்பட்ட பின் செயல்படுத்தப்படும்.

ஏற்கனவே உள்ள பாஸ்டேக் தொகையை இத்திட்டத்தில் பயன்படுத்த முடியாது

வருடாந்திர பாஸ் தரவு தளத்தின் மூலம் சரிபார்க்கப்பட்ட பின்னர் வணிகமில்லாத மற்றும் தனியார் கார், ஜீப், வேன்களுக்கு மட்டுமே பொருந்தும். எந்த வணிக வாகனத்திலும் பயன்படுத்தப்பட்டால் முன்னறிவிப்பின்றி உடனடியாக செயலிழக்கம் ஏற்படும். குறிப்பாக ஏற்கனவே உள்ள பாஸ்டேக் தொகையை இத்திட்டத்தில் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.