புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.


புதுச்சேரியில் வழக்கமான உற்சாகத்துடன் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. கடற்சாலை காந்தி சிலை முன்பு நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி தேசியக்கொடியேற்றி வைத்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.


நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. புதுச்சேரி முதலைமைச்சர் ரங்கசாமி தேசியக்கொடியேற்றி வைத்து காவலர்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் சபாநாயகர் செல்வம், சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் சிவா, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர்.


தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனைப்படைத்த காவலர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முதல்வர் ரங்கசாமி பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதனையடுத்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்களின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த விழாவில் சுதந்திர தின உரையாற்றிய முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.7.10 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும், என்று அறிவித்த அவர் காமராஜர் நிதியுதவித் திட்டத்தின் கீழ் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்படிப்பிற்கு கல்வி உதவித்தொகையாக ரூ.19.40 கோடி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி விமான நிலையத்தில் பெரிய ரக விமானங்கள் எளிதாக வந்து செல்ல வசதியாக விமான நிலைய விரிவாக்கத்திற்காக தமிழகத்திலிருந்து 30 ஏக்கர் நிலம் கையகப்படுத்த ரூ.425 கோடி மத்திய அரசிடம் கோரியுள்ளது, என்று தெரிவித்தார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.


காரைக்கால் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டப்படும் எனவும் சுதந்திர தின உரையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டார். தொடர் விடுமுறை காரணமாக புதுச்சேரியில் குவிந்த சுற்றுலாவினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிளவில் இந்த வண்ணமயமான சுதந்திர தினவிழாவை கண்டுகளித்தனர்.


11ஆண்டுகளுக்குப் பின் ரசிகர்களை சந்தித்த அஜித்... மும்பை டூ திருச்சி நடந்தது என்ன?











மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண