தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இன்று பிறப்பித்த உத்தரவில், “சென்னை மாநகராட்சியின் தென்மண்டல துணை துணையர் முனைவர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஐ.ஏ.எஸ். பணியிடம் மாற்றப்பட்டு, சென்னை மாநகராட்சியின் சுகாதார பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சியின் வருவாய் மற்றும் நிதி்த்துறையின் துணை ஆணையராக மேகநாத ரெட்டி ஐ.ஏ.எஸ். சென்னை மாநகராட்சியின் பணிகள் மற்றும் பொறுப்பு பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில்துறையின் துணை செயலாளர் ராஜகோபால் சுங்ரா ஐ.ஏ.எஸ். பணியிடம் மாற்றப்பட்டு, சென்னை மாநகராட்சியின் மண்டல துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி, ஸ்ரீரங்கம் துணை ஆட்சியர் விசு மகாஜன் ஐ.ஏ.எஸ்., சென்னை மாநகராட்சியின் வருவாய் மற்றும் நிதிப்பிரிவின் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். இதன்படி, தலைமை செயலாளராக பொறுப்பு வகித்த ராஜீவ் ரஞ்சன் பணியிடம் மாற்றப்பட்டு, புதிய தலைமை செயலாளராக வெ.இறையன்பு நியமிக்கப்பட்டார். மேலும், சென்னை மாநகராட்சி ஆணையராக பொறுப்புவகித்த பிரகாஷ் மாற்றப்பட்டு, ககன்தீப் சிங் பேடி புதிய ஆணையராக நியமிக்கப்பட்டார். தற்போது, சென்னை மாநகராட்சிக்குள் அதிகாரிகளை பணியிடம் மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.