கடலூர்: பிரபல உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி, சொமேட்டோவிற்கு மாற்றாக கடலூரில் ZAAROZ என்ற புதிய செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடலூரில் உணவு டெலிவரி செயலி அறிமுகம்
பிரபல உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி, சொமேட்டோவிற்கு மாற்றாக, நாமக்கல், கரூரை தொடர்ந்து கடலூரிலும் ZAAROZ என்ற புதிய செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை கடலூர் மாவட்ட ஹோட்டல் சங்கத் தலைவர் ராம்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மருந்தகம், காய்கறி, மளிகை , பேக்கரி உள்ளிட்ட 9 சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆர்டர் செய்யப்படும் உணவுகள், ஹோட்டலில் என்ன விலைக்கு வழங்கப்படுகிறதோ அதே விலைக்கு டெலிவரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 1ம் தேதி முதல், நாமக்கல் நகரம் மற்றும் தாலுகாவில் உள்ள உணவகங்களின் உரிமையாளர்கள், ஸ்விக்கி மற்றும் ஜொமாட்டோவிற்கு உணவு வழங்குவதை நிறுத்தினர். அதிக கமிஷன்கள் கேட்பதாகவும், மறைமுக கட்டணங்கள் மூலம் சம்பாதிப்பதாகவும் கூறி, உணவக உரிமையாளர்கள் உணவு விலையை உயர்த்தினர்.
சிதம்பரத்தைச் சேர்ந்த ஒரு தொழில்முனைவர் உருவாக்கிய செயலி
சிதம்பரத்தைச் சேர்ந்த ஒரு தொழில்முனைவர் உருவாக்கிய இந்த செயலி முதலில், கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் ஒரு தொழில்முனைவோரால் நடத்தப்படும் புதிய ஆன்லைன் உணவு விநியோக ஒருங்கிணைப்பாளரான ஜாரோஸ் மூலம் உணவை வழங்குவதாக உணவக உரிமையாளர்கள் அறிவித்தனர். நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பூஜை செய்த பிறகு, உணவு விநியோகம் தொடங்கப்பட்டது.
பின்னர், நாமக்கலில ஜூலை 7, 2025 அன்று 50 உணவகங்கள் இந்த செயலியுடன் இணைந்தன, மேலும் 3,000 பேர் செயலியை பதிவிறக்கம் செய்து, நூறு டெலிவரிகள் முடிந்தன.
பிரபல உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி, சொமேட்டோவிற்கு மாற்றாக, நாமக்கல், கரூரை தொடர்ந்து கடலூரிலும் ZAAROZ என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆம், இதனை கடலூர் மாவட்ட ஹோட்டல் சங்கத் தலைவர் ராம்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேக்கரி உள்ளிட்ட 9 சேவைகள் வழங்கப்பட்டுள்ளன
இதில் மருந்தகம், காய்கறி, மளிகை , பேக்கரி உள்ளிட்ட 9 சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆர்டர் செய்யப்படும் உணவுகள், ஹோட்டலில் என்ன விலைக்கு வழங்கப்படுகிறதோ அதே விலைக்கு டெலிவரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 1ம் தேதி முதல், நாமக்கல் நகரம் மற்றும் தாலுகாவில் உள்ள உணவகங்களின் உரிமையாளர்கள், ஸ்விக்கி மற்றும் ஜொமாட்டோவிற்கு உணவு வழங்குவதை நிறுத்தினர். அதிக கமிஷன்கள் கேட்பதாகவும், மறைமுக கட்டணங்கள் மூலம் சம்பாதிப்பதாகவும் கூறி, உணவக உரிமையாளர்கள் உணவு விலையை உயர்த்தினர்.
சிதம்பரத்தைச் சேர்ந்த ஒரு தொழில்முனைவர் உருவாக்கிய இந்த செயலி முதலில், கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் ஒரு தொழில்முனைவோரால் நடத்தப்படும் புதிய ஆன்லைன் உணவு விநியோக ஒருங்கிணைப்பாளரான ஜாரோஸ் மூலம் உணவை வழங்குவதாக உணவக உரிமையாளர்கள் அறிவித்தனர். நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பூஜை செய்த பின்னர், உணவு விநியோகம் தொடங்கப்பட்டது. பின்னர், நாமக்கலில ஜூலை 7, 2025 அன்று 50 உணவகங்கள் இந்த செயலியுடன் இணைந்தன, மேலும் 3,000 பேர் செயலியை பதிவிறக்கம் செய்து, நூறு டெலிவரிகள் முடிந்தன. இந்த செல்போன் செயலி பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது.