நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. இந்த விவகாரத்தை கையில் எடுத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்ததால் மத்திய கல்வி அமைச்சர் பதவியையே தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளார்.

Continues below advertisement

சட்டத்திருத்த மசோதா:

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து பொதுத்தேர்வுகள் முறைகேடுகள் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மக்களவையில் இந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சட்டத்தில் மேற்கொள்ள உள்ள சட்டத்திருத்தங்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

Continues below advertisement

1. தேர்வு முறைகேட்டில் ஈடுபடுவோருக்கான தண்டனை 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகள் வரை உயர்த்தப்பட உள்ளது.

2. தேர்வு முறைகேட்டில் ஈடுபடும் குற்றவாளிக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்க முடிவு

3. இந்த விவகாரத்தில் தனி நபர் குற்றங்களுக்கான அபராதம் ரூபாய் 10 லட்சத்தில் இருந்து ரூபாய் 50 லட்சம் வரை உயர்த்த திட்டம்

4. வினாத்தாள் கசிவில் ஈடுபடும் கும்பல்களுக்கு குறைந்தபட்ச தண்டணையே 7 ஆண்டுகளாக உயர்த்த முடிவு

5. வினாத்தாள் கசிவில் ஈடுபடும் கும்பல்களுக்கு ரூபாய் 1 கோடி வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

6. வினாத்தாள் அச்சிடுதல், தேர்வு நடத்துதல், கணினி தொழில்நுட்ப ஆதரவு போன்ற பணிகளில் ஈடுபடும் தனியார் முகமைகள் குற்றச்சாட்டில் ஈடுபட்டால் ரூபாய் 5 கோடி வரை அபராதம் வசூலிக்கப்படும். அந்நிறுவனம் பொதுத்தேர்வுகளை நடத்த தடைக்காலம் இரட்டிப்பாக்கப்படும்.

7. நிறுவனத்தின் இயக்குனர்கள், மூத்த அதிகாரிகளுக்கு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்பு இருப்பதால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை, 5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 

8. வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கங்களை ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்க முடிவு

9.வினாத்தாள் கசிவு விவகாரங்களில் விரைவு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் மனுக்களை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்.

இந்த திருத்தங்கள் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மிகப்பெரிய நெருக்கடியை மத்திய அரசுக்கு உண்டாக்கியிருப்பதால் இனி இதுபோன்ற விவகாரங்களில் மிகவும் கவனத்துடன் செயல்பட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த சட்டத்திருத்தம் முழு மனதாக மக்களவையில் நிறைவேற்றப்படும் என்று கருதப்படுகிறது. இந்த விவகாரத்தால் முடங்கி வந்த நாடாளுமன்றம் இனி வரும் நாட்களில் சிக்கலின்றி இயங்கும் என்று கருதப்படுகிறது.