டெல்லியில் நடந்த நீட் தேர்வு குளறுபடிக்கு எதிரான போராட்டம் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டிலும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். பல இடங்களில் மாணவர்கள் சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டபோது, அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
நீட் போராட்டம்:
இந்த நிலையில், போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் மீதான வழக்கை உச்சநீதிமன்றம் ரத்துசெய்ய உத்தரவிட்டுள்ள நிலையிலும், தமிழ்நாடு அரசு ரத்து செய்யவில்லை என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்கு தவெக விளக்கம் அளித்துள்ளது.
தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
”நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாட்டில் போராடிய மாணவர்கள் மீது வழக்குத் தொடுத்தது தவெக அரசு. அந்த வழக்குகளை ரத்து செய்யச் சொன்னது உச்ச நீதிமன்றம்" என ஒரு பொய்யான பதிவைச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, அதனைப் பரப்பியும் வருகிறார்கள்.
ரத்து செய்ய உத்தரவில்லை:
உச்சநீதிமன்றம், நீட் தேர்வு முறைகேட்டிற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களில் 18 வயதிற்குக் கீழ் உள்ள மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தால் அவர்களை உடனடியாகக் காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும், டெல்லி மற்றும் இதர மாநிலங்களில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் புலன் விசாரணையைத் தொடரலாம் என்றும் தெரிவித்துள்ளதே அன்றி, வழக்குகளை ரத்து செய்ய எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
தாமாக முன்வந்து ரத்து செய்துள்ள தவெக:
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளைத் தமிழக அரசு தாமாக முன்வந்து ரத்து செய்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மாணவர்களின் நலனையும் எதிர்காலத்தையும் கருதியே இந்த வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், இந்த உண்மைகள் எதையும் தெரிந்துகொள்ளாமல், சமூக வலைத்தளத்தில் கணக்கு வைத்திருப்பதை மட்டுமே தகுதியாகக் கொண்ட சிலர், இது போன்ற தரமற்ற, தவறான தகவல்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியில் பரப்புவதை இத்தோடு நிறுத்திக்கொள்வது நல்லது.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
