நீட் தேர்வால் இதுவரை 21 மாணவர்களை இழந்துள்ளோம். இதற்கு ஒரே காரணம் மத்திய ஆட்சியில் இருக்கும் பாஜக அரசுதான் என காஞ்சிபுரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.


காஞ்சிபுரம் ( Kanchipuram News ): முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன்  ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. +2 பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற  42 மாணவ , மாணவியர்களுக்கு ஊக்க தொகை மற்றும் 530 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை இளைஞர் நலன்,விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு வழங்கினார்.


அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு வழங்கி பேசியதாவது:-


இதுவரை, காஞ்சிபுரம் மண்ணிற்கு மூன்று முறை வந்துள்ளேன். விழா ஏற்பாடு செய்த அனைவரையும், வாழ்த்துகிறேன். தமிழ்நாடு முழுவதும், கலைஞரின், நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். அந்த வகையில் கட்சியில் பல்வேறு அணிகள் உள்ளன. அந்த அணிகளின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். அதில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முதல்வர் கட்டளையிட்டு இருக்கிறார்.




அந்த வகையில் பொதுமக்கள் நலன் பெறும் வகையில் கல்வி உதவிகளை வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நீட் தேர்வால் இதுவரை 21 மாணவர்களை இழந்துள்ளோம். இதற்கு ஒரே காரணம் மத்திய ஆட்சியில் இருக்கும் பாஜக அரசுதான். சட்டமன்றத்தில் இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். தேர்தல் வாக்குறுதியிலும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினோம். இதற்காக முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். மேலும் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கண்டனம் தெரிவித்து, திமுகவின் இளைஞர் அணி, மாணவர் அணி, மற்றும் மருத்துவர் அணிகள் இணைந்து நாளை தமிழ்நாடு முழுவதும் இருக்கும் மாவட்டங்களிலும் உண்ணாவிரத அறப்போர் போராட்டத்தை அறிவித்திருக்கிறோம். இதற்கு கட்சி பாகுபாடு இன்றி மாணவர்களுக்காக மாணவர்களின் பெற்றோர்களுக்காகவும், அறப்போராட்டத்தில்  கலந்துகொள்ள வேண்டும் என்று அவர் வேண்டுகோள் வைத்து பேசினார்.




இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம். எல். ஏ  காஞ்சிபுரம்,  தொகுதி எம்.பி க.செல்வம் , காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் ,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், மாவட்ட ஊராட்சி துணை குழு தலைவர் நித்திய சுகுமார், காஞ்சிபுரம்  ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி  குமார் , ஒன்றிய செயலாளர்கள்   பி.எம்.குமார், படுநெல்லி பாபு, தலைமை செயற்குழு உறுப்பினர் எம் எஸ் சுகுமார் பகுதி செயலாளர் திலகர், வெங்கடேசன் ,   உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


 




CM Stalin: ’துபாயில் ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்படும்’ - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு..