Golu Bommai - Golu Toys : தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகமான பூம்புகார் விற்பனை நிலையத்தில் 'கொலு பொம்மைகள்' என்ற பெயரில் ஆண்டுதோறும் நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடத்தி வருகிறது.


சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழகம் பூம்புகார் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இதில் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு இவற்றை கைவினை கலைகள் மூலம் உருவாக்கப்படும் கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரமாகவும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அவர்களுக்கு பல விருதுகளை கொடுத்து ஊக்குவித்து மற்றும் கைவினை கலைகள் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையில் செயல்பட்டு வருகிறது. 


கைவினைக் கலைஞர்கள், பொது மக்களும் பயன்பெறும் வகையில் பண்டிகை காலங்களிலும் மற்றும் விழா காலங்களிலும் பல கண்காட்சிகளை சேலத்தில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையம் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு விஜயதசமி மற்றும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு 'கொலு பொம்மைகள்' என்ற பெயரில் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை 16.09.2024 முதல் 25.10.2024 வரை நடைபெற உள்ளது.



இக்கண்காட்சியில் சிறப்பு அம்சமாக அனைத்து வகை கொலு பொம்மைகள் குழுவாகவும் (செட்) தனியாகவும் பல கருத்துக்களை எடுத்துரைக்கும் வண்ணம் கொலு பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. கண்காட்சிக்கு புதுவரவாக பாரா ஒலிம்பிக் பதக்கங்களை குவித்த சேலம் மாரியப்பன் செட், குபேரன் செட், தசரதர் யாக பூஜை, கங்கா செட், ராமர் ஜனனம், ராமர் வில்வித்தை, அயோத்தி ராமர், நெல்லையப்பர் காந்திமதி, சரவணகுமார் செட், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா செட், போன்ற பல வகையான புது வரவுகள் வந்துள்ளன.


மேலும் சேலம் கோட்டை மாரியம்மன் கோவில், மேட்டூர் அணைகள், பூரி ஜெகநாதன் தேர், கேந்திரநாத் கோவில், திருச்சி மலைக்கோட்டை பெருமாள் கோவில், தஞ்சை பெரிய கோவில், திருப்பதி பெருமாள் கோவில், முருகன் தேர், மாடி வீடு, ஓட்டு வீடு, சிறிய பெரிய கோவில் கோபுரங்கள், நவ நாயகிகள் செட், நவதுர்கைகள் செட், ராதை அலங்காரம் செட், சிவன் பிரம்மா விஷ்ணு செட், ஆண்டாள் செட், போலீஸ் செட், டாக்டர் செட், சப்த ரிஷிகள் செட், சீதா கல்யாணம் செட், சித்தர்கள் செட், ஞானப்பழம் செட், வாலி மோட்சம் செட், நவகிரக பொம்மைகள் செட், விவசாயம் செட், பழனி காவடி செட், அஷ்ட பைரவர் செட், ராவணன் தர்பார் செட், அலங்காரம் செய்யப்பட்ட மரப்பாச்சி பொம்மைகள், அஷ்டலட்சுமி செட், தசாவதாரம் செட், கல்யாண செட், கார்த்திகைப்பெண்கள் செட், முப்பெருந்தேவியர் செட், கிரிக்கெட் செட், வேலை செய்யும் பெண்கள் செட், கும்பகர்ணன் செட், ஆழ்வார் செட், சஞ்சீவி மலை செட், பெருமாள் தாயார் செட், முருகன் வள்ளி தெய்வானை செட், பரதநாட்டியம் செட், பொய்க்கால் குதிரை செட், காய்கறி கடை செட், பழக் கடை செட், கீதா உபதேசம் செட், பேண்ட் வாத்தியம் செட், கோமாதா, லட்சுமி நாராயண செட், லட்சுமி நரசிம்மர், தட்சிணாமூர்த்தி செட், சிவன் குடும்பம் செட், தாத்தா பாட்டி செட், கோவர்த்தனகிரி செட், கஜேந்திர மோட்சம் செட், சமையல் செட், பாண்டுரங்கன் ரகுமாயி ராமேஸ்வரம், திருப்பதி, மாயாபஜார், சாப்பாடு பந்தி செட், வளைகாப்பு செட், நிச்சயதார்த்தம் செட், நவநரசிம்மர் செட், டிரம் செட், பிரம்மோற்சவம் செட், மிருகங்கள் செட், ஐயர் திருக்கல்யாணம், மீனாட்சி திருக்கல்யாணம் செட், ஸ்ரீ விஷ்ணு மற்றும் சித்தர்கள், அத்தி வரதர் செட், கரகாட்டம் செட், நால்வர்கள் செட், ஆசிரியர்கள் பள்ளிக்கூடம் செட், கேரம் போர்டு செட், ஆருத்ரா தரிசனம், அறுபடை முருகன், பழனி காவடி செட், கண்ணப்பர் செட், லலிதாம்பிகை செட், சீனிவாச திருக்கல்யாணம் செட், மைசூர் தசரா செட், சொர்க்கவாசல், வைகுண்டம் செட், சப்தமாதாக்கள் செட். சங்கீத மும்மூர்த்திகள் செட், அருணகிரிநாதர் செட், அபிராமி செட். அஷ்ட ஆஞ்சநேயர் செட், தீமிதி செட். பஞ்ச மூர்த்தி செட், கேரள கொண்டை மேளம் செட், பூம்பாவை செட், அஷ்ட அம்மன் செட், தெய்வானை கல்யாண செட், குழந்தைகள் விளையாடக் கூடிய சென்னபட்டனா பொம்மைகள் போன்ற பலவகையான செட் பொம்மைகளும் மற்றும் தனி பொம்மைகளும் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.



இந்த ஆண்டு கண்காட்சியில் சுமார் ரூபாய். 45 இலட்சம் வரை விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் 15 ரூபாய் முதல் 9,000 ரூபாய் வரை 5,000க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் 10% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இக்கண்காட்சி குறித்து மேலாளர் நரேந்திர போஸ் கூறுகையில், இக்கண்காட்சியில் காட்சிக்கு மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பல்வேறு வகையான கொலு பொம்மைகள் மற்றும் பூஜை பொருட்களை சேலம் மாநகர மக்கள் வாங்கி தங்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடும், மேலும் இந்த பொம்மைகள் மற்றும் சிலைகளை உற்பத்தி செய்யும் கைவினை  கலைஞர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்று கூறினார்.