மங்களம் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக ஐந்து கிலோ மீட்டர் சென்று குடிப்பதற்கும், குளிப்பதற்கும் தண்ணீர் பிடித்து வந்த நிலையில் தற்போது காசு கொடுத்து வாங்கி தங்களது தேவைகளை பூர்த்தி செய்தாலும் தற்போதுள்ள சூழ்நிலையில் எங்களது வாழ்வாதாரத்தை குடிநீர் பாதித்துள்ளதாக வாட்ஸ் அப்பில் தகவல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, மங்களம் ஊராட்சி மன்ற தலைவர் குப்பாயி, கலெக்டர் மற்றும் எஸ்பியிடம் நேரில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மங்களம் கிராம ஊராட்சியில், 5 வருடமாக குடிநீர் பற்றாக்குறை இருப்பதாகவும், பொதுமக்கள் தண்ணீர் எடுக்க தினமும் 5 கி.மீ தூரம் செல்வதாகவும், குளிக்கவும், குடிக்கவும் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளதாகவும் வாட்ஸ் அப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டி உள்ளதால், அப்பகுதி மக்கள் பிழைப்பு நடத்த வெளியூர் சென்று விட்டதாக தவறான தகவல் பகிரப்பப்பட்டு வருகிறது. மங்களம் ஊராட்சியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 வருட காலத்தில் குடிநீர் விநியோகம் தொடர்பாக புகார் ஏதும் பெறப்படவில்லை. இது தொடர்பாக எந்தவித போராட்டமும் நடைபெறவில்லை.




மங்களம் ஊராட்சியில் மொத்தமுள்ள 13 குக்கிராமங்களில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏதும் இல்லாத சூழலில், ஒரு சிலரால் வாட்ஸ் அப்பில் பரப்பப்படும் தவறான தகவல்களால், ஊராட்சி நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுகிறது. எவ்வித ஆதாரமும் இன்றி தவறான தகவலை சமூக ஊடகங்களில் பரப்பும் நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.




இந்நிலையில் நாம் களத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் அப்பகுதி பொதுமக்கள் பலர் உப்புத் தண்ணீர் நாள்தோறும் வருவதாகவும் நல்ல தண்ணீர் வாரத்திற்கு இரண்டு முறை வருவதாகவும் தெரிவித்துள்ளனர். எனினும் சிலர் நல்ல தண்ணீர் 15 நாட்களுக்கு ஒரு முறை வருவதால் தண்ணீர் தேவைக்காக 5 கிலோமீட்டர் தூரம் உள்ள அருகாமையில் உள்ள ஊரில் சென்று இருசக்கர வாகனத்தில் தண்ணீர் தேவைக்காக எடுத்து வருவதால் கால விரையையும் எரிபொருள் செலவும் ஏற்ப்படுவதாக கூறினர். மேலும் எங்கள் மங்களம் ஊராட்சியில் தண்ணீர் பம்ப் இருந்தும் தண்ணீர் பிடிப்பதற்கு ஏதுவாக பைப்புகள் அமைக்கவில்லை என்பதும், விரைவாக பைப்புகளை அமைத்து தங்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.




நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, மல்ல சமுத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட மங்களம் ஊராட்சியில் "தண்ணீர் பஞ்சம் ஐந்து கிலோ மீட்டர் சென்று தண்ணீர் பிடித்து வருகிறோம்" என வாட்ஸ் அப்பில் தற்போது தகவல் உலா வருவதால் அதிகாரிகளும், ஆட்சியர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்தாலும் விரைந்து மங்களம் ஊராட்சியில் தண்ணீர் தங்கு தடையின்றி வழங்க வேண்டுமென அப்பகுதி சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.