மேலும் அறிய

DMK MLA PONNUSAMY: ஸ்டாலின் ஷாக்.. திமுக எம்.எல்.ஏ., திடீர் மரணம் - நாமக்கல் மக்கள் வேதனை, என்ன ஆச்சு?

DMK MLA PONNUSAMY Died:  திமுகவைச் சேர்ந்த சேந்தமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே. பொன்னுசாமி உடல்நலக்குறைவால் காலமானார்.

DMK MLA PONNUSAMY Died:  திமுகவைச் சேர்ந்த சேந்தமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே. பொன்னுசாமி மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திமுக எம்.எல்.ஏ., காலமானார்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரான கே.பொன்னுசாமி உயிரிழந்துள்ளார். 74 வயதான அவர் மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். கடந்த 2006ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து நான்கு முறை சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்ட பொன்னுசாமி, 2006 மற்றும் 2021 ஆகிய இரண்டு முறை வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட, திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரது மறைவுக்கு பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

நடந்தது என்ன?

இன்று அதிகாலை வீட்டில் இருக்கும் போது பொன்னுசாமிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கொல்லிமலையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டார்.  அங்கு முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு உயர் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு எம்எல்ஏ பொன்னுசாமி உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்:

திமுக தலைமை, பொன்னுசாமியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “பொன்னுசாமி கட்சிக்கு அளித்த பங்களிப்பு மறக்க முடியாதது” என்று அஞ்சலி செலுத்தியுள்ளார். கனிமொழி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பொன்னுசாமி அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் கழகத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். பொன்னுசாமியின் உடல் சேந்தமங்கலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பிறகு இறுதி அஞ்சலி நடைபெற உள்ளதாம்.

தேர்தல் பயணம்:

2006ம் ஆண்டு சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்ட பொன்னுசாமி, 64 ஆயிரத்து 506 வாக்குகளை பெற்று, அதிமுக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றார். ஆனால் 2011ம் ஆண்டு தேர்தலில் தேமுதி வேட்பாளரிடமும், 2016ம் ஆண்டு அதிமுக வேட்பாளரிடமும் தோல்வியை தழுவினார். இருப்பினும் நான்காவது முறையாக கடந்த 2021ம் ஆண்டு தேர்தலிலும் பொன்னுசாமிக்கு திமுக தலைமை வாய்ப்பு அளித்தது. அப்போது, 90 ஆயிரத்து 681 வாக்குகளை பெற்று, அதிமுக வேட்பாளரை வீழ்த்தி இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆவார். பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட சேந்தமங்கலம் தனித்தொகுதியில் திமுகவின் முகமாக அறியப்பட்ட பொன்னுசாமியின் மறைவு, கட்சிக்கு பெரும் இழப்பு என அக்கட்சி நிர்வாகிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

இடைத்தேர்தலா?

பொன்னுசாமியின் மறைவை தொடர்ந்து சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி காலியாகியுள்ளது. அதேநேரம், சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், அந்த தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Indian Cricket Team: மண்ணள்ளிப்போடும் கம்பீர் & அகர்கர், அணியை சிதைக்கும் கில் - நாசமாய் போன ப்ளேயிங் லெவன்
Indian Cricket Team: மண்ணள்ளிப்போடும் கம்பீர் & அகர்கர், அணியை சிதைக்கும் கில் - நாசமாய் போன ப்ளேயிங் லெவன்
Zohran Mamdani: ட்ரம்பை மதிக்காத நியூயார்க் மக்கள் - இந்திய வம்சாவளியை மேயராக்கி சம்பவம் - யார் இந்த ஜோரன் மம்தானி?
Zohran Mamdani: ட்ரம்பை மதிக்காத நியூயார்க் மக்கள் - இந்திய வம்சாவளியை மேயராக்கி சம்பவம் - யார் இந்த ஜோரன் மம்தானி?
ADMK: என்னையை எதிர்த்தால் செங்கோட்டையன் கதி தான்.! மாவட்ட செயலாளர்களை அலற விடப்போகும் எடப்பாடி பழனிசாமி
என்னையை எதிர்த்தால் செங்கோட்டையன் கதி தான்.! மாவட்ட செயலாளர்களை அலற விடப்போகும் எடப்பாடி பழனிசாமி
TN Roundup: விஜய், எடப்பாடி ஆலோசனை, குறைந்த தங்கம் விலை, சென்னையில் புது ரூல் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: விஜய், எடப்பாடி ஆலோசனை, குறைந்த தங்கம் விலை, சென்னையில் புது ரூல் - தமிழகத்தில் இதுவரை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

திமுகவில் வைத்திலிங்கம்?விழும் முக்கிய விக்கெட்டுகள் அதிர்ச்சியில் OPS | Vaithilingam Joins DMK
’’குழந்தைக்கு அப்பா நான் தான்! ஒத்துக்கொண்ட மாதம்பட்டி’’ ஜாய் க்ரிஷில்டா வழக்கில் ட்விஸ்ட்
பொன்முடிக்கு பதவி! இறங்கி வந்த கனிமொழி! ஸ்டாலின் போட்ட கண்டிஷன்
Costume designer பண மோசடி! EVP உரிமையாளர் பகீர் புகார்! பின்னணி என்ன?
ஓபிஎஸ் கூடாரம் காலி..திமுகவில் மனோஜ் பாண்டியன்!குஷியில் தென்மாவட்ட திமுக!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Indian Cricket Team: மண்ணள்ளிப்போடும் கம்பீர் & அகர்கர், அணியை சிதைக்கும் கில் - நாசமாய் போன ப்ளேயிங் லெவன்
Indian Cricket Team: மண்ணள்ளிப்போடும் கம்பீர் & அகர்கர், அணியை சிதைக்கும் கில் - நாசமாய் போன ப்ளேயிங் லெவன்
Zohran Mamdani: ட்ரம்பை மதிக்காத நியூயார்க் மக்கள் - இந்திய வம்சாவளியை மேயராக்கி சம்பவம் - யார் இந்த ஜோரன் மம்தானி?
Zohran Mamdani: ட்ரம்பை மதிக்காத நியூயார்க் மக்கள் - இந்திய வம்சாவளியை மேயராக்கி சம்பவம் - யார் இந்த ஜோரன் மம்தானி?
ADMK: என்னையை எதிர்த்தால் செங்கோட்டையன் கதி தான்.! மாவட்ட செயலாளர்களை அலற விடப்போகும் எடப்பாடி பழனிசாமி
என்னையை எதிர்த்தால் செங்கோட்டையன் கதி தான்.! மாவட்ட செயலாளர்களை அலற விடப்போகும் எடப்பாடி பழனிசாமி
TN Roundup: விஜய், எடப்பாடி ஆலோசனை, குறைந்த தங்கம் விலை, சென்னையில் புது ரூல் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: விஜய், எடப்பாடி ஆலோசனை, குறைந்த தங்கம் விலை, சென்னையில் புது ரூல் - தமிழகத்தில் இதுவரை
TVK Vijay: புயலாகுமா? புஸ்ஸாகுமா? தவெக சிறப்பு பொதுக்குழு - விஜய் கையிலெடுத்துள்ள முக்கிய மாற்றங்கள் என்ன?
TVK Vijay: புயலாகுமா? புஸ்ஸாகுமா? தவெக சிறப்பு பொதுக்குழு - விஜய் கையிலெடுத்துள்ள முக்கிய மாற்றங்கள் என்ன?
Plane Crash: திடீரென கீழே விழுந்து சறுக்கி நொறுங்கிய விமானம்..  தீப்பிழம்பு, கரும்புகை, 3 பேர் பலி - வீடியோ வைரல்
Plane Crash: திடீரென கீழே விழுந்து சறுக்கி நொறுங்கிய விமானம்.. தீப்பிழம்பு, கரும்புகை, 3 பேர் பலி - வீடியோ வைரல்
கனமழை எச்சரிக்கை! தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று மழை: வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
கனமழை எச்சரிக்கை! தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று மழை: வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
Hyundai Venue Price: நெக்ஸான், ப்ரேஸ்ஸாவை அலறவிடும் வென்யு - விலையில் வெடியை வைத்த ஹுண்டாய், முழு லிஸ்ட்
Hyundai Venue Price: நெக்ஸான், ப்ரேஸ்ஸாவை அலறவிடும் வென்யு - விலையில் வெடியை வைத்த ஹுண்டாய், முழு லிஸ்ட்
Embed widget