மேலும் அறிய

நலம்AI வாட்ஸ்அப் சேவை: அரசு மருத்துவமனை OP சீட்டு இனி உங்கள் விரல் நுனியில்!

அரசு மருத்துவமனைக்கு செல்லும் பொது மக்கள் வீட்டிலிருந்தபடியே தங்களின் சுய பதவி (one-time Registration) மற்றும் OP முன்பதிவை (Appointment booking) செய்து கொள்ள முடியும்.

டிஜிட்டல் மற்றும் ஏஐ தொழில்நுட்பங்களின் வளர்ச்சி அரசு சேவைகள் எளிமையாக மக்களுக்கு சென்று சேர்வதை உறுதிப்படுத்துகின்றன. ஒரு காலத்தில் ஒரு அரசு சான்றிதழ் வாங்க வேண்டும் என்றால் கூட நாள் கணக்கான அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டி இருக்கும். ஆனால் இப்போது நிலைமையே வேறு. நம் போனிலேயே எல்லா வேலையும் முடித்து கொள்ள முடிகிறது.

நலம்AI வாட்ஸ்அப் சேவை: அரசு மருத்துவமனை OP சீட்டு இனி உங்கள் விரல் நுனியில்!

பெரும்பாலான அரசு சேவைகள் டிஜிட்டல் மயமாகிவிட்டாலும் அரசு மருத்துவமனைகளுக்கு நாம் செல்ல வேண்டும் என்றால் இன்றும் காலையிலேயே சென்று OP சீட்டு வாங்க காத்திருக்க வேண்டி தான் இருக்கிறது. ஆனால் இனி அந்த நிலை தேவையில்லை. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு நலம்AI என்ற வாட்ஸ் அப் சேவையை கொண்டு வந்துள்ளது.

இனிஅரசு மருத்துவமனை சேவைகள் உங்கள் விரல் நுனியில் கிடைக்கும். தமிழ்நாடு அரசின் புதிய முன்னெடுப்பான "நலம்AI" WhatsApp Chatbot சேவை இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. எனவே பொதுமக்கள் இனி வீட்டிலிருந்தபடியே அரசு மருத்துவமனைகளுக்கான மருத்துவ முன்பதிவு (OP Appointment ) மற்றும் சுய பதிவு (One-time Registration) செய்து கொள்ளலாம்.

உங்கள் போனில் வாட்ஸ் அப்பில் 96192 22999 என்ற எண்ணிற்கு "HI" என மெசேஜ் அனுப்பினாலே போது. உங்கள் மொழியை தேர்ந்தெடுக்க சொல்லி காட்டும். அதில் ஆங்கிலம் அல்லது தமிழ் என ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். உடனே "NalamAI (TN-NHM)-க்கு வரவேற்கிறோம்! பதிவு, மருத்துவர் மருந்து சீட்டு, பரிசோதனை அறிக்கை, சுகாதார அடையாள அட்டை மற்றும் அருகில் மருத்துவமனைகள் ஆகியவற்றில் நான் உங்களுக்கு உதவ முடியும்.

சேவையை தொடங்க, உள்நுழையவும் என காட்டும். உங்களின் மொபைல் நம்பரை உள்ளிட்டால் போதும். அரசு மருத்துவமனைக்காக OP சீட்டு கிடைக்கும். எனவே மருத்துவமனை சென்று நேரடியாக மருத்துவரை பார்க்கலாம். இது மட்டுமில்லாமல் உங்களின் லொகேஷனை பகிர்ந்தால் உங்களுக்கு அருகில் என்னென்ன அரசு மருத்துவமனைகள் இருக்கின்றன என்பன உள்ளிட்ட விவரங்களையும் வாட்ஸ் அப்பிலேயே காணலாம்.

முதல்கட்டமாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் நெஞ்சக நோய் பிரிவில் சோதனை முறையில் இன்று தொடங்கும் இத்திட்டம் விரைவில் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி பொதுமக்களுக்கு அரசின் மருத்துவ சேவைகள் எளிதில் சென்றடையும் வகையில் உரையாடலுடன் வடிவமைக்கப்பட்ட "நலம்AI" என்ற பெயரில் WhatsApp Chatbot சேவையை மருத்துவம், மருத்துவ கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சகம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நலம்AI வாட்ஸ்அப் சேவை: அரசு மருத்துவமனை OP சீட்டு இனி உங்கள் விரல் நுனியில்!

இச்சேவையின் மூலம் பொது மக்கள் வீட்டிலிருந்தபடியே தங்களின் சுய பதவி (one-time Registration) மற்றும் OP முன்பதிவை (Appointment booking) செய்து கொள்ள முடியும். இச்சேவை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலன் நெஞ்சக நோய் பிரிவில் (Department of Respiratory Medicine) சோதனை முறையில் நாளை முதல் செயல்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் 96192 22999 என்ற எண்ணை போனில் சேவ் செய்து கொள்ளுங்கள். இதற்கு "HI" என அனுப்பினால் போதும். அதிலேயே என்னென்ன சேவைகள் கிடைக்கின்றன என்ற தகவல் காட்டும், அவற்றில் உங்களுக்கு எது தேவையோ அதை கிளிக் செய்தால் போதும்.

Advertisement

தலைப்பு செய்திகள்

விருதுநகர் NH 744: நில இழப்பீடு பெறாதோருக்கு சிறப்பு முகாம்!
விருதுநகர் NH 744: நில இழப்பீடு பெறாதோருக்கு சிறப்பு முகாம்!
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
Netanyahu Warns Iran: இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
MG Hybrid SUV India launch: No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
Embed widget