மேலும் அறிய

34,000+ வங்கி பணியிடங்கள் 2026: எஸ்பிஐ, ஐபிபிஎஸ் தேர்வுகள் மற்றும் இலவச பயிற்சி விவரங்கள்!

நாகப்பட்டினத்தில் தொங்கப்பட்டுள்ள எஸ்பிஐ மற்றும் ஐபிபிஎஸ் வங்கித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா நேரடிப் பயிற்சி வகுப்புகளை இளைஞர் பயன்படுத்தி கொள்ளுமாறு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாகை: இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள ஆயிரக்கணக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 

இந்தத் தேர்வுகளுக்குத் தயாராகும் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு உதவும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்புக் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இப்போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள தகுதியான தேர்வர்கள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி பலனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எஸ்பிஐ மற்றும் ஐபிபிஎஸ் கிளார்க் பணியிடங்கள்

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) அமைப்பானது ஜூனியர் அசோசியேட் (கிளார்க்) 2026-ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்வின் மூலம் நாடு முழுவதும் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளைகளில் காலியாக உள்ள 9,124 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பப் பதிவு இணையதளம் வழியாக நிறைவடைந்துள்ள நிலையில், முதல்நிலைத் தேர்வு வரவிருக்கும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்குத் தோராயமாக மாதம் ரூ.46,000 வரை ஊதியம் வழங்கப்படும். அதேபோன்று, ஐபிபிஎஸ் கிளார்க் 2026 தேர்வுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டு விண்ணப்பிக்கும் காலம் முடிவடைந்துள்ளது. நாட்டின் 11 முக்கிய பொதுத்துறை வங்கிகளில் உள்ள 11,403 வாடிக்கையாளர் சேவை இணைப்பாளர் பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படவுள்ள நிலையில், இதற்கான முதல்நிலைத் தேர்வு அக்டோபர் மாதத்தில் நடத்தப்பட உள்ளது.

ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி கிராமப்புற வங்கிப் பணிகள்

பிராந்திய கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி 2026 அறிவிப்பும் தற்போது வெளிவந்துள்ளது. இத்தேர்வின் வாயிலாகக் கிராமப்புற வங்கிகளில் மொத்தம் 13,706 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. இதில் ஆபிஸ் அசிஸ்டண்ட் பதவிக்கு 8,183 இடங்களும், அதிகாரி நிலை ஸ்கேல் 1, 2 மற்றும் 3 ஆகிய பதவிகளுக்கு 5,523 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் காலம் கடந்த 01.09.2026 அன்று தொடங்கி வரும் 21.09.2026 வரை நடைபெறுகிறது. ஆபிஸ் அசிஸ்டண்ட் பதவிக்கு 18 முதல் 28 வயதிற்குட்பட்டவர்களும், ஸ்கேல் 1 பதவிக்கு 18 முதல் 30 வயதினரும், ஸ்கேல் 2 பதவிக்கு 21 முதல் 32 வயதினரும் மற்றும் ஸ்கேல் 3 பதவிக்கு 21 முதல் 40 வயதிற்குட்பட்ட மாணவர்களும் விண்ணப்பிக்கத் தகுதிபெற்றவர்கள் ஆவர்.

விருப்பமும் தகுதியும் உள்ள தேர்வர்கள் www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

நாகப்பட்டினத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்

மேற்கண்ட எஸ்பிஐ ஜூனியர் அசோசியேட், ஐபிபிஎஸ் கிளார்க் மற்றும் ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி ஆகிய வங்கிப் போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சிறப்புக் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குப் பின்புறம் இயங்கி வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாகக் கடந்த 01.09.2026 முதல் இந்த வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் இந்த நேரடிப் பயிற்சி வகுப்புகளில் தவறாமல் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும், பயிற்சி வகுப்புகள் தொடர்பான விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 9499055916 என்ற வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்புகொண்டு பயன்பெறலாம் என்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார், தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
தஞ்சாவூர் மாவட்ட இல்லத்தரசிகள் அதிர்ச்சி... ஒரே மாதத்தில் கடலைப் பருப்பு கிலோவுக்கு ரூ.30 அதிகரிப்பு
தஞ்சாவூர் மாவட்ட இல்லத்தரசிகள் அதிர்ச்சி... ஒரே மாதத்தில் கடலைப் பருப்பு கிலோவுக்கு ரூ.30 அதிகரிப்பு
லியோ சிவக்குமார், பிரிகிடா சாகா நடிக்கும் ”டெலிவரி பாய் ” ட்ரெய்லர் வெளியீடு! முழு அப்டேட் இதோ!
லியோ சிவக்குமார், பிரிகிடா சாகா நடிக்கும் ”டெலிவரி பாய் ” ட்ரெய்லர் வெளியீடு! முழு அப்டேட் இதோ!
"எல்லோருக்குமான அரசா? வெட்கக்கேடு" - முதல்வர் விஜய்யை விளாசிய தினகரன்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
Embed widget