புதுச்சேரி ஆளுநர் மாளிகையில்  நாகலாந்து உதய நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் புதுச்சேரியில் வாழும் நாகலாந்து இன மக்கள் பங்கேற்று சிறப்பித்தனர் நிகழ்ச்சியில் நாகலாந்து பாரம்பரிய நடனமான நடனத்தை நடனம் ஆடினர். இதில் ஆளுநர் தமிழிசை நாகலாந்து மக்களுடன் இணைந்து நடனமாடி மகிழ்ந்தார்.  


பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர் "ஆளுநர் மாளிகை தர்பார் ஹாலில் நாகலாந்து இன மக்கள் பாடிய பாடல் என்னை மெய்சிலிர்க்க வைத்தது சொர்க்கத்தில் இருப்பது போல் என்னை உணர வைத்தது. நாகலாந்து வாழ்வின் கொண்டாட்டத்தை உணர்த்தும். வாழ்வே கொண்டாட்டம் என்ற கருத்தை நாட்டுக்கு மக்கள் உணர்த்துகின்றனர். நாகலாந்து இன மக்களின் ஆடை கவரும் வகையில் உள்ளது. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு மாநில தின விழாக்களும் இங்கு கொண்டாடப்படுகின்றன. புதுச்சேரி வளர்ச்சிக்கு நாகலாந்து மக்கள் தொண்டாற்றி வருகின்றனர். கலாச்சாரம் மற்றும் மொழியால் வேறாக இருந்தாலும் இந்தியர் என்ற ஒரே குடையின் கீழ் வருகிறோம். எல்லைகள் வேறாக இருந்தாலும் நம் சகோதரத்துவத்தில் ஒற்றுமையில் இருக்கிறோம். நட்புறவிலும் தொடர்வோம்" என்று குறிப்பிட்டார் 


செய்தியாளர் சந்திப்பில் ஆளுநர் தமிழிசை கூறுகையில் :-


"புதுச்சேரி அடுத்த பாகூர் கிராமத்திற்கு ஆய்வுக்காக சென்றிருந்தேன். அந்த கிராமத்தில் சமுதாய நலக்கூடம் அங்கன்வாடிகள் பராமரிப்பு கிடந்தது. இதனை உடனடியாக சரி செய்யும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


அமர்ந்து பேசினால் பல்வேறு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்


தமிழகத்தில் முதல்வரும், ஆளுநரும் அமர்ந்து பேசினால், பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். நட்பு பலமாக இருந்தால் மக்களுக்கும் பல திட்டங்கள் கிடைக்கும். அமர்ந்து பேசுங்கள் என்று கூறினால், இது என்ன குடும்பமா அமர்ந்து பேச என்று என்னை கடிந்து கொள்கிறார்கள். சண்டை போட்டுக்கொண்டு நீதிமன்றத்திற்கு செல்வதை விட அமர்ந்து பேசினால் பல்வேறு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். ஆளுநரும், முதல்வரும் பாலமாகவும், பாசமாகவும் இருக்க வேண்டும்"என்று கேட்டுக் கொண்டார்.


மேலும், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட போகிறீர்களா என்ற கேள்விக்கு பதில் ஆளுநர், அதற்கு இப்போது எந்த அவசரமும் இல்லை. வருங்காலத்தில் பார்க்கலாம். பின்னால் தெரிவிக்கப்படும். அது "சஸ்பென்ஸ்", என்றார்.