இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!

இந்தியா ஒரு மலர் தோட்டம் எனவும் ஆனால் அதில் தாமரை இருக்காது எனவும் சிபிஎம் உறுப்பினர் நாகை மாலி தெரிவித்தார்

Continues below advertisement

இந்தியா ஒரு மலர் தோட்டம் எனவும் ஆனால் அதில் தாமரை இருக்காது எனவும் சிபிஎம் உறுப்பினர் நாகை மாலி தெரிவித்தார்.

Continues below advertisement

சட்டப்பேரவையில் சிபிஎம் உறுப்பினர் நாகை மாலி பேசினார். அப்போது பேசிய அவர், “இந்தியா என்பது ஒரு வானவில். அதில் பல வண்ணங்கள் இருக்கும். இந்தியா என்பது ஒரு மலர் தோட்டம். அதில் ரோஜா இருக்கும், மல்லி இருக்கும், முல்லை இருக்கும், சாமந்தி இருக்கும். ஆனால் தாமரை இருக்காது” எனத் தெரிவித்தார்.

இதைக் கேட்டதும் பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கல கலவென சிரித்துவிட்டனர்.  

தொடர்ந்து பேசிய அவர், “தாமரை மட்டுமே வைப்பதற்கு ஏற்பாடு செய்கிறார்கள். இந்தியா என்பது பல வண்ணங்களை கொண்ட மலர்தோட்டம் என நாம் சொல்லுகிறோம். எந்த நாட்டுக்கும் இல்லாத ஒரு சிறப்பு இந்தியாவுக்கு உள்ளது.

பல நாடுகளில் சொல்வார்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று. ஆனால் வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடுதான் இந்தியா. வேற்றுமை இந்தியாவில் இல்லை என்று சொன்னால் ஒற்றுமை இல்லை.

பல மலர்கள் இருந்தால்தான் அதை தோட்டம் என்று சொல்வோம். அதுபோல, இந்தியாவில் வேற்றுமை கடைபிடிக்கப்பட வேண்டும். அப்படியானால்தான் இந்தியா ஒற்றுமையாக இருக்கும்.

ஒன்றிய அரசு வேற்றுமையை புறந்தள்ளி ஒற்றை கலாச்சாரத்தை கொண்டு வர பார்க்கிறார்கள். ஒற்றை நடைமுறையை இந்தியாவில் திணிப்பதற்கு முயற்சி செய்கிறார்கள்.

நாங்கள் இந்தி படிக்க சொல்லவில்லை; மூன்றாவது மொழியைத்தான் படிக்க சொல்கிறோம் என தேனை தடவுகிறார்கள். மூன்றாவது மொழி என சொல்வது எது? ஒரு வகுப்பறையில் 2 பேர் குஜராத்தி மொழி கேட்கிறான். 4 பேர் தெலுங்கு சொல்லிக்கொடுங்கள் என சொல்கிறான். மேலும் 4 பேர் கன்னடம் சொல்லிக்கொடுங்கள் என்கிறான்.

ஒரு வகுப்பறையில் 15 மொழி கேட்டால் அத்தனைக்கு ஆசிரியர் போட்டு சொல்லித்தர முடியுமா? சாத்தியமா? மறைமுகமாக இந்தியை திணிக்கப்பார்க்கிறீர்கள்.

தமிழ்நாடு கல்வி உள்ளிட்ட அனைத்திலும் வளர்ந்திருக்கிறது. இது இருமொழிக்கொள்கையை பின்பற்றியதால்தான்” என பேசினார்.

இதை கேட்டுக்கொண்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின் இந்த கூற்று சரிதான் என்பதை தலையை அசைத்து மிகவும் ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தார்.

 

Continues below advertisement