அகில இந்திய அளவில் நடைபெறும் IAS , IPS , IFS உள்ளிட்ட பதவிகளுக்கு தமிழ்நாட்டினர் அதிக அளவில் தேர்ச்சி பெறும் வகையில், முதல் நிலை தேர்வுக்கு இலவச பயிற்சியுடன் கூடிய ஊக்கத்தொகை வழங்கும் நான் முதல்வன் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.  

Continues below advertisement

நான் முதல்வன் திட்டம்:

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2023 ஆம் ஆண்டு துவங்கி வைத்தார்.

அப்பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசு வேலைவாய்புகான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் 2023-24 க்கான தமிழ் நாடு அரசின் பட்ஜெட் உரையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) அகில இந்திய குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மையத்துடன் இணைந்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் தேவையான வசதிகளை செய்து உதவும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.

Continues below advertisement

1000 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை:

இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டுதோறும் 1, 000 சி சர்வீசஸ் பயின்று வரும் மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வுக்கு தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ. 7.500 வழங்கப்படும்.

இத்திட்டத்தின் படி முதல் நிலைத் தேர்வு-2026-க்கு தயாராகுபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான மதிப்பீட்டுத் தேர்வை 15.09.2024 அன்று நடத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 1000 தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் 7500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டைப் போலவே அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் கீழ்  இயங்கி வரும் இந்திய குடிமை பயிற்சி மையங்களுக்கான(ஆர்.ஏ புரம் சென்னை பாரதியார் பல்கலைக்கழகம் கோவை மற்றும் காமராஜர் பல்கலைக்கழகம் மதுரை) சேர்க்கை மதிப்பீட்டுத் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த மதிப்பீட்டுத் தேர்வை எழுதி ஊக்கத்தொகை மற்றும் அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையங்களுக்கான சேர்க்கை பெற விரும்பும் ஆர்வமுள்ள இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விரிவான அறிவிக்கையைப் படித்து பார்த்து  02.08.2024 முதல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Naan Mudhalvan Massive Upskilling Platform (tn.gov.in) என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 17.08.2024