நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 20 பேருக்கு மேற்பட்டோர் ட்விட்டர் கணக்குகள் திடீரென ஒரே நேரத்தில் முடக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


முடக்கப்பட்ட சீமானின் ட்விட்டர் பக்கத்தில், சட்டப்பூர்வ கோரிக்கைகளை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டு இருந்தது. 


 


மேலும், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளான இடும்பாவனம் கார்த்தி, பாக்யராஜ்.சே, சுனந்தா, விக்கி பார்கவ் உள்ளிட்ட 20 க்கு மேற்பட்டோரின் ட்விட்டர் பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளது. இதுவரை முடக்கத்திற்கான காரணம என்னவென்று இதுவரை தெரியவில்லை.