கரூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் அமராவதி ஆற்றில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் மேயர், துணை மேயர், ஆணையர் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்னும் தூய்மை பணியில் கரூர் மாநகராட்சி மற்றும் கரூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் இணைந்து நடத்தும் பிளாஸ்டிக் ஒழிப்பு மாபெரும் தூய்மை பணி முகாம் இன்று நடைபெற்றது.
கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணைமேயர் தாரணி சரவணன், ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற தூய்மை பணியில் அமராவதி ஆற்று படுகையில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை கொக்கி போன்ற அமைப்பு கொண்ட இரும்பு கம்பிகள் கொண்டு எடுத்து அகற்றினர். இதில் கரூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் மற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த முகாமில் சுமார் இரண்டு டன் பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்பட்டன.
முன்னதாக லைட் ஹவுஸ் பேருந்து நிறுத்தம் அருகில் அமைந்துள்ள வாக் அண்ட் ஜாக் மேம்பாலம் நுழைவு வாயில் முன்பு நின்று அனைவரும் இணைந்து தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து சாலையில் பனிமூட்டம் போல் காட்சியளிக்கும் கரும்புகை -வாகன ஓட்டிகள் அவதி சுவாச கோளாறு ஏற்படும் அபாயம்.
கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு கரூர் - வாங்கல் சாலையில் உள்ள குப்பை கிடங்கில் கடந்த 31ஆம் தேதி மாலை நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
மலை போல் குவிந்து கிடந்த குப்பை கிடங்கில் பற்றிய தீயானது மளமளவென எரிய தொடங்கியதை தொடர்ந்து கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்க ஆரம்பித்தனர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தொடர்ந்து பற்றி எரிந்த தீ,சிறிது சிறிதாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு ஐந்தாவது நாளில் தீயை அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் அதே குப்பைக்கிழங்கில் தீயானது மீண்டும் பற்ற தொடங்கியது, புகை மூட்டத்துடன் தொடங்கிய தீயானது,குவிந்து கிடக்கும் குப்பை கிடங்கில் ஒரு சில இடங்களில் கரும் புகை மூட்டத்தில் எரிய தொடங்கியது. கரும் புகை சூழ்ந்ததால் கரூர் வாங்கல் சாலை புகை மண்டலமாக காட்சியளிக்கிறது, கரூரில் இருந்து வாங்கல்,மோகனூர், நாமக்கல் செல்வதற்குக்கான பிரதான சாலை என்பதால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
தொடர் புகை காரணமாக அப்பகுதியில் வசித்து வருபவர்களுக்கு சுவாச கோளாறு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது என கூறுகின்றனர். இந்த நிலையில் குப்பை கிடங்கு முழுவதுமாக அனைக்க மாநகராட்சி லாரியில் மூலம் தண்ணிகள் கொண்டுவரப்பட்டு அனைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைந்துள்ள கரூர் தீயணைப்பு மீட்பு பணி வீரர்கள்.