மேலும் அறிய

நகராட்சி நிர்வாக ஊழல்; வழக்குப் பதிய கோர்ட் ஆணை- ஊழல் சாம்ராஜ்யம் என்னவாகும்? அன்புமணி கேள்வி

நகராட்சி நிர்வாகத்துறை நியமன ஊழல் குறித்து வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் ஆணை: ஊழல் சாம்ராஜ்யம் உடைந்து நொறுங்குமா? அன்புமணி கேள்வி

நகராட்சி நிர்வாகத்துறை நியமன ஊழல் குறித்து வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில், திமுகவின் ஊழல் சாம்ராஜ்யம் உடைந்து நொறுங்குமா என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘’தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகத்துறையில் 2,538 பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளை நியமிக்க ஒரு பணிக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வீதம் மொத்தம் ரூ.888 கோடி அளவுக்கு கையூட்டு பெறப்பட்டது குறித்து  சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் உள்ளிட்டோர்  மீது வழக்குப் பதிவு செய்யும்படி தமிழக காவல்துறையின் கையூட்டுத் தடுப்புப் பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.  திமுக அரசின் அனைத்துத் துறை ஊழல்களை அம்பலப்படுத்தும் வகையிலும், அரசு நிர்வாகத்தை தூய்மைப்படுத்தும் நோக்குடனும் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

திமுக ஆட்சி என்றாலே ஊழல் தான் என்று கூறும் அளவுக்கு  கடந்த ஐந்தாண்டுகளாக அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடி வருகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு 2538 அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களை நியமிப்பதற்காக ஒவ்வொரு பணிக்கும் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை கையூட்டாக வசூலிக்கப்பட்டதையும், அப்பணம் ஹவாலா முறையில் பல இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதையும் சோதனைகளின் மூலம் கண்டறிந்த அமலாக்கத்துறை, அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தும்படி 232 பக்க ஆவணங்களுடன் கடந்த ஆண்டு அக்டோபர் 27-ஆம் நாள் தமிழக காவல்துறைக்கு கடிதம் எழுதியிருந்தது.

இந்த ரூ.888 கோடி வேலைவாய்ப்பு ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அக்டோபர் 29ஆம் நாள் நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். ஆனால், இது குறித்து எந்த விசாரணையும் நடத்த முடியாது என்று திமுக அரசு மறுத்து வந்தது. வழக்குப் பதிவு செய்ய ஆணையிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தை ஏமாற்றும் நோக்குடன் இந்த ஊழல் குறித்து முதல்கட்ட விசாரணைக்கு ஆணையிடப்பட்டிருப்பதாகவும், 180 நாள்களில் அந்த விசாரணை முடிந்த பிறகு தான் இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் திமுக அரசு கூறி வந்தது. ஆனால், அதையெல்லாம் ஏற்க மறுத்து விட்ட சென்னை உயர்நீதிமன்றம், ரூ.888 கோடி ஊழல் குறித்து விசாரணை நடத்த  ஆணையிட்டுள்ளது.

இந்த ஊழலை மூடி மறைக்க திமுக அரசு மேற்கொண்ட முயற்சிகள் குறித்து  உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கும் கருத்துகள் மிகவும் கடுமையானவை. ‘‘தமிழக காவல்துறை மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. இந்த வழக்கின் விசாரணையை வேறு புலனாய்வு அமைப்புக்கு அனுப்புவதற்கு தான் நான் நினைத்தோம். ஆனால், இது குறித்து முதல் கட்ட விசாரணையை கையூட்டுத் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அதனால் அந்த முடிவை கைவிடுகிறோம்.  இந்த விவகாரத்தில் முதல்கட்ட விசாரணைக்கு தேவையில்லை. உடனடியாக  முதன்மை வழக்கைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்க வேண்டும்”  என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். திமுக அரசுக்கு உண்மையாகவே அடிப்படையான சுயமரியாதை உணர்வு இருந்திருந்தால், இனியும் பதவியில் நீடிக்கும் தகுதி தங்களுக்கு இல்லை என்று கூறி பதவி விலகியிருக்க வேண்டும். ஆனால், ஊழலில் திளைப்பதை வாடிக்கையாகக் கொண்ட திமுக, என்ன தான் கண்டனங்களுக்கு ஆளானாலும் பதவியை விட்டு விலகாது.

நகராட்சி நிர்வாகத்துறையில்  நடந்த ஊழல்களில் ஒன்றின் மீது மட்டுமே  விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில், அதே துறையில்  பல்வேறு ஒப்பந்தங்களை வழங்கியதில் ரூ.1,020 கோடி அளவுக்கு கையூட்டு மற்றும் கட்சி நிதி வசூலிக்கப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களை திசம்பர் மாதம் முதல் வாரத்திலும், அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களை பணியிட மாற்றம் செய்வதற்காகவும், அவர்கள் விரும்பும் வளமான பதவிகளில் அமர்த்துவதற்காக ரூ.7 லட்சம் முதல் சில கோடிகள் வீதம் ரூ. 366 கையூட்டாக வசூலிக்கப்பட்டதற்கான  ஆதாரங்களை கடந்த ஜனவரி மாதமும் அமலாக்கத்துறை தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் அனுப்பியிருந்தது.

இவை தவிர தமிழ்நாட்டில் ரூ.4,730 கோடி அளவுக்கு நடைபெற்றுள்ள ஆற்று மணல் கொள்ளை ஊழல் தொடர்பாகவும்  ஆதாரங்களை அனுப்பியுள்ள அமலாக்கத்துறை  அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. ஆனால்,  அது குறித்தும் விசாரணை நடத்த திமுக அரசு மறுத்து வருகிறது. இப்போது  ரூ.888 கோடி பணி நியமன ஊழல் குறித்து விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில், அதை முன்மாதிரியாகக் கொண்டு மற்ற ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்த  தமிழக காவல்துறையின் கையூட்டுத் தடுப்புப் பிரிவு முன்வர வேண்டும்.

மேலும் ரூ. 2000 கோடி கனிமவள  ஊழல், ரூ.1240 கோடி நெல் கொள்முதல் ஊழல்,   ரூ. 165 கோடி நெல் சரக்குந்து ஒப்பந்த ஊழல், பள்ளிக்கரணை சதுப்பு நில அடுக்குமாடி ஊழல்,  மது வரி ஏய்ப்பில் -ரூ.1.82 லட்சம் கோடி ஊழல், ஆண்டுக்கு ரூ.5400 வீதம் ஐந்தாண்டுகளில் ரூ.27,000 கோடிக்கு பாட்டிலுக்கு ரூ.10 ஊழல், ஆண்டுக்கு  ரூ.15,000 கோடி வீதம் ஐந்தாண்டுகளில்  ரூ.75,000 கோடி மின் கொள்முதல் ஊழல் என திமுக ஆட்சியில் குறைந்தது ரூ. 6 லட்சம் கோடிக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்படும் போது, அந்த ஊழல்கள் சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சர்களும் சிறைக்கு செல்லப் போவது உறுதி. ஊழல் மூலம் குவித்து வைத்திருக்கும் பணத்தைக் கொண்டு தான் அனைவரையும் விலைக்கு வாங்குவது உள்ளிட்ட அரசியலை திமுக செய்து வருகிறது.

நகராட்சி நிர்வாகத்துறையின் பணி நியமன ஊழல் குறித்து வழக்குப் பதிவு  செய்து விசாரணை நடத்த  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில், திமுகவின் ஊழல் கோட்டை இடிந்து தரைமட்டமாகும். அதனால் மக்கள் மத்தியில் ஏற்படும் அதிர்வுகளால் வரும் தேர்தலில் திமுக  அடியோடு துடைத்து எறியப்படும்’’ என்று அன்புமணி தெரிவித்துள்ளார். 

 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பட்டா கிடைக்கவில்லையா.. நீண்ட காலமாக காத்திருந்த மக்களுக்கு குஷி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
பட்டா கிடைக்கவில்லையா.. நீண்ட காலமாக காத்திருந்த மக்களுக்கு குஷி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
கூடுவாஞ்சேரியில் சோகம்: கொசுவத்தி சுருளால் சிதைந்த குடும்பம்! அதிர்ச்சியில் மக்கள், காரணம் என்ன?
கூடுவாஞ்சேரி சோகம்: கொசுவத்தி சுருளால் சிதைந்த குடும்பம்! அதிர்ச்சியில் மக்கள், காரணம் என்ன?
மயிலாடுதுறை: சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக அரசுப் பேருந்து - நெகிழ்ச்சியில் கிராம மக்கள்!
மயிலாடுதுறை: சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக அரசுப் பேருந்து - நெகிழ்ச்சியில் கிராம மக்கள்!
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cylinder Issue Hotels Closed: என்னது, இன்னைல இருந்து ஹோட்டல்கள் இயங்காதா.?! சிலிண்டர் தட்டுப்பாடால் உரிமையாளர்கள் அதிரடி.!
என்னது, இன்னைல இருந்து ஹோட்டல்கள் இயங்காதா.?! சிலிண்டர் தட்டுப்பாடால் உரிமையாளர்கள் அதிரடி.!
Trump Furious Warning: “மரணம், நெருப்பு, ஆக்ரோஷம்.! 20 மடங்கு கடுமையா தாக்குவோம்“; ஈரானுக்கு ட்ரம்ப் பயங்கர எச்சரிக்கை
“மரணம், நெருப்பு, ஆக்ரோஷம்.! 20 மடங்கு கடுமையா தாக்குவோம்“; ஈரானுக்கு ட்ரம்ப் பயங்கர எச்சரிக்கை
Senthil Balaji: விஜயை விடுங்க..! சைலண்டா செந்தில் பாலாஜிக்கு ஸ்கெட்ச் போடும் சிபிஐ - டீம் போட்டு ஆலோசனை
Senthil Balaji: விஜயை விடுங்க..! சைலண்டா செந்தில் பாலாஜிக்கு ஸ்கெட்ச் போடும் சிபிஐ - டீம் போட்டு ஆலோசனை
TVK Vijay: விஜய்க்கு லீவு கொடுத்த சிபிஐ..! சாஃப்ட் டீலிங்கிற்கு ஒகே சொன்ன தவெக? டெல்லிக்கு முக்கிய கோரிக்கை
TVK Vijay: விஜய்க்கு லீவு கொடுத்த சிபிஐ..! சாஃப்ட் டீலிங்கிற்கு ஒகே சொன்ன தவெக? டெல்லிக்கு முக்கிய கோரிக்கை
Gas Cylinder: அடுத்த ஆப்பு..! கேஸ் சிலிண்டர் புக் செய்ய புதிய கட்டுப்பாடுகள், விதிகள் என்ன? மத்திய அரசு அறிவிப்பு
Gas Cylinder: அடுத்த ஆப்பு..! கேஸ் சிலிண்டர் புக் செய்ய புதிய கட்டுப்பாடுகள், விதிகள் என்ன? மத்திய அரசு அறிவிப்பு
Royal Enfield Meteor 350: தம்பி நீ கிளம்பு..! மீடியர் 350-க்கு பட்ஜெட் இல்லையா - சேம் சேம் ஆக கிடைக்கும் 5 பைக் மாடல்கள்
Royal Enfield Meteor 350: தம்பி நீ கிளம்பு..! மீடியர் 350-க்கு பட்ஜெட் இல்லையா - சேம் சேம் ஆக கிடைக்கும் 5 பைக் மாடல்கள்
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
LPG Gas Bengaluru: கேஸ் தட்டுப்பாடு: முடங்கும் உணவகங்கள்! கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்திற்கும் ஆபத்தா?
LPG Gas Bengaluru: கேஸ் தட்டுப்பாடு: முடங்கும் உணவகங்கள்! கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்திற்கும் ஆபத்தா?
Embed widget