விழுப்புரம்: ஈழ தமிழர்களுக்கு நீதி கிடைக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி பொதுவாக்கெடுப்பு நடத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தால் ஒரு சீட் கூட கேட்காமல் அவருக்கு ஆதரவளிப்பேன் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், முள்ளிவாய்க்கல் இனப்படுகொலை 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. நினைவேந்தல் நிகழ்ச்சியில் கன்னியாகுமரியில் இருந்து கொண்டுவரப்பட்ட சுடரினை பெற்ற தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சுடரினை நினைவேந்தல் நிகழ்வில் ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகளுக்கு மெழுகுவர்த்தி கொடுக்கப்பட்டிருந்தபோது அதிகளவு காற்று அடித்தால் மெழுகு வர்த்தி ஏத்த முடியாமல் போனதால் மூவாயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் கையில் வைத்திருந்த செல்போன் டார்ச் லைட் வெளிச்சம் அடித்து அஞ்சலி செலுத்தினர்.

நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்....

இலங்கையில் ஈழ தமிழர்கள் படுகொலையின்போது பாரத நாடு இந்தியா தடுக்காமல் இலங்கை சிங்கள ராணுவத்திற்கு உதவியதாகவும், சர்வதேச ஐக்கிய சபையில் நீதி விசாரனை வாங்கி தரமுடியவில்லை , இந்தியா வணிகசந்தையாக இருப்பதால் ஈழ தமிழர்களுக்கு நீதி பெற்று தர முடியவில்லை என்றும் இனி வரும் காலங்களில் தமிழகத்தில் யார் ஆட்சி அமைந்தாலும் ஈழத்தில் நடந்த கொடுமைக்கு நீதி கிடைக்க அழுத்தம் தர வேண்டும், தேர்தலுக்கு யார் வேண்டுமானாலும் வாக்கு கேளுங்கள் ஆனால் ஈழ தமிழர்கள் கொலை செய்யபட்டவர்களுக்கு நீதி கேட்க வேண்டும் ஈழத்தில் எத்தனை உயிர்கள் கொல்லப்பட்டு இருக்கிறது அதற்கு நீதி கேட்காமல் இங்கு சினிமா மோகமும், சாதிய அரசியலும் தான் நிகழ்கிறது என வேதனை தெரிவித்தார்.

இந்தியாவில் ஈழ உறவுகளுக்கு மருத்துவம் படிக்க அனுமதிக்க வேண்டுமென போராடி வருவதாகவும் தான் யாரிடத்திலும் பணத்தை பெற்று ஈழ உறவுகளுக்கு உதவி செய்யவில்லை பாஸ்போர்ட் இல்லாமல் வந்த ஈழ தமிழர்களை தனது முந்திரி காட்டில் பாதுகாத்து பூமி பந்தில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைத்ததாகவும், விடுதலைக்காக சொத்து பத்துக்களை கொடுத்தவர்கள் இடம்தெரியாமல் உள்ளனர். கஞ்சா, லாட்டரி, தாது மணல் கொள்ளையில் ஈடுபடுவர்களிடமிருந்து நிதி பெற்று நினைவேந்தல் நிகழ்வு நடத்தவில்லை, வளரும் பிள்ளைகளுக்கு தீய பழக்கங்கள் இல்லாமல் வளர்க்க வேண்டும் இனப்படுகொலை குறித்து அவர்களுக்கு சொல்லி தரவேண்டும் என வலியுறுத்தினார். தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் வைக்கிறேன் நீங்கள் ஆட்சி கட்டிலில் இருக்கும் போதே ஈழ படுகொலைக்கு தீர்மாணம் நிறைவேற்ற வேண்டும், பொதுகணக்கெடுப்பு நடத்த வலியுறுத்த வேண்டும் தனக்கு தேர்தலில் சீட்டு கொடுங்கள் கொடுக்காமல் போங்கள் ஆனால் இதை செய்யுங்கள் என தெரிவித்தார். ஈழ தமிழர்களுக்கு நான் கேட்பதை செய்தால் ஒரு சீட் கூட இல்லாமல் ஸ்டாலினினுக்கு ஆதரவளிப்பேன்

ஒத்த சீட்டு முத்தையா தான் ஈழ தமிழர்களுக்கு உதவி வருகிறேன். கிடைத்த ஒத்த சீட்டினை வைத்து கொண்டு ஒப்பந்தங்கள் காண்ட்ராக் கேட்டு முதல்வர் ஸ்டாலினை சந்திக்கவில்லை, விசிக தலைவர் திருமாவளவன் திருச்சியில் கூட்டம் கூட்டுகிறார், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மாமல்லபுரத்தில் கூட்டம் கூட்டுகிறார் அந்த கூட்டத்தினை ஈழத்தமிழர்கள் விடுதலைக்கான கூட்டம் கூட்ட வேண்டும் அப்போது தான் நீதி கிடைக்கும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.