Montha Cyclone: வங்கக் கடலில் நாளை மறுநாள் உருவாகும் மோந்தா புயல், மிக தீவிரமானதாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Continues below advertisement

தீவிர புயலாக மாறும் - வானிலை மையம் எச்சரிக்கை

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக உருவெடுத்துள்ள நிலையில், தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவெடுக்க உள்ளது. அதன் பிறகு, வரும் 27ம் தேதி புயலாக மாறி, 28ம் தேதி அன்று தீவிர புயலாக வலுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

காற்றழுத்தத் தாழ்வு நிலை எங்கே?

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இன்று, போர்ட் பிளேயருக்கு (அந்தமான் & நிக்கோபார் தீவுகள்) மேற்கு-தென்மேற்கே சுமார் 420 கிமீ, விசாகப்பட்டினத்திற்கு (ஆந்திரப் பிரதேசம்) தென்கிழக்கே 990 கிமீ, சென்னைக்கு (தமிழ்நாடு) கிழக்கு-தென்கிழக்கே 990 கிமீ, காக்கிநாடாவிற்கு (ஆந்திரப் பிரதேசம்) தென்கிழக்கே 1000 கிமீ மற்றும் கோபால்பூருக்கு (ஒடிசா) தென்கிழக்கே 1040 கிமீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

இது கிட்டத்தட்ட மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, 26 ஆம் தேதிக்குள் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, 27 ஆம் தேதி காலை தென்மேற்கு மற்றும் அருகிலுள்ள மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் ஒரு சூறாவளி புயலாக மாறும். அதன் பிறகு அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்காக ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளது.

9 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு

புயல் உருவாவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதை தொடர்ந்து, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி, குளச்சல் மற்றும் ராமேஷ்வரம் என தமிழ்நாட்டின் 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதுபோக, புதுச்சேரி மற்று காரைக்கால் துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

ரெட் அலெர்டில் சென்னை:

புயல் காரணமாக வரும் 27ம் தேதியன்று திருவள்ளூர், சென்னை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு, ஏற்கனவே கன முதல் மிக கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மோந்தா தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்குறிப்பிடப்பட்டுள்ள 3 மாவட்டங்களில், சென்னையில் மிக அதிகப்படியான மழை பொழியக்கூடும். இதனால், சென்னையில் பெரும் பாதிப்புகள் ஏதேனும் ஏற்படுமா? என மக்கள் கவலைபட தொடங்கியுள்ளனர்.