விழுப்புரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ; ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் முக்கிய தகவல்!
விழுப்புரம் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார் நிலையில் உள்ளது, பெஞ்சல் புயலால் பாதிப்பிற்குள்ளான விவசாய கிணறுகளுக்கு நிவாரணம் விரைவில் வழங்கபட்டும் - மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார் நிலைபடுத்தப்பட்டுள்ளதாகவும்
பெஞ்சல் புயலால் பாதிப்பிற்குள்ளான விவசாய கிணறுகளுக்கு நிவாரணம் விரைவில் வழங்கப்படுமென ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
தீபாவளி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை துவக்கம்
கோ-ஆப்டெக்ஸ் தனது வாடிக்கையாளர்களின் நலனுக்காக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சிறப்பு விற்பனையை செய்து வருகிறது. இந்த ஆண்டிற் சிறப்பு விற்பனையை காமராஜர் கடை வீதியிலுள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
இந்த ஆண்டு, கோ-ஆப்டெக்ஸ் கடலூர் மண்டலத்திற்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 8.கோடியே 75 லட்சம் விற்பனை இலக்கை நிர்ணயித்துள்ளதில் விழுப்புரத்திற்கு 60 லட்சம் விற்பனை இலக்காகவும், திண்டிவனத்திற்கு 23 லட்சம் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு 30 சதவிகிதம் சிறப்பு தள்ளுபடியுடன், அனைத்து அரசு ஊழியர்களும் கடன் விற்பனை வசதியும் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு விற்பனையை துவக்கி வைத்ததார்.
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
பின் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான்.,
எதிர்வரும் பருவ மழையை முன்னிட்டு, கடந்த மூன்று ஆண்டுகால அனுபவத்தின் அடிப்படையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு துறையினருக்கு இந்த ஆண்டு புதிய கருவிகள் வாங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த முறை தகவல் தொடர்பு பிரச்சனை ஏற்பட்ட நிலையில் இந்த முறை அதனை சரிய செய்வதற்கு புதிய தொலைத்தொடர்பு கருவிகள் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கடந்தாண்டு உடைந்த ஏரிக்கரை உடைப்புகள் சரி செய்யப்பட்டுள்ளதாகவும், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் மழை பாதிப்பு ஏற்பட்டால் நியாயவிலை கடைகள் மூலம் உணவுகள் வழங்க தயாராக வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
பொதுப்பணி துறையின் கீழ் உள்ள ஏரிகளை தூர்வார தற்போது ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளதாகவும், தன்னார்வ நிறுவனங்கள் மூலமும் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு வருவதாகவும், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அதிக அளவிலான மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், விழுப்புரம் நகரத்துக்கு உட்பட்ட வி.மருதூர் ஏரியை தூர்வாத நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். பெஞ்சல் புயலின் போது பாதிக்கப்பட்ட கிணறுகளுக்கு கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்குரிய நிவாரணம் விரைவில் வழங்கப்படும் என ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.





















