அரசு பணி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இனி செயலி : அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தகவல்

டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, சீருடைப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட அரசுப்பணிகளுக்கு விண்ணப்பிக்க கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

Continues below advertisement

டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, சீருடைப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட அரசுப்பணிகளுக்கு விண்ணப்பிக்க கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

மேலும், அந்த செயலியில் தேர்வு அறிவிப்பு, பாடத்திட்டங்கள், தேர்வு முடிவுகள் ஆகியவற்றை செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம் எனவும், விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிப்பார்த்தல் போன்ற பணிகளையும் செயலி மூலம் மேற்கொள்ள வழிவகை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

வருகின்ற மே 21 ம் தேதி டிஎன்பிஎஸ்சி - குரூப் 2 தேர்வை நடத்த இருக்கிறது. அதனை தொடர்ந்து, ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடத்தப்படும். மொத்தம் 200 கேள்விகளுக்கு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடத்தப்படும். முதல் 100 கேள்விகள் தமிழ் சார்ந்து கொள்குறி வகையில் கேட்கப்படும். பொது அறிவு பகுதியில் இருந்து 75 கேள்விகளும் கணக்கு மற்றும் நுண்ணறிவு பகுதியில் இருந்து 25 கேள்விகளும் கேட்கப்படும். மொத்தம் 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும்.

மொத்தம் 7,382 காலி இடங்கள் உள்ளன. அனைத்து இடங்களும் தேர்வு நடத்தப்படும். 81 இடங்கள் - விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 7,301 இடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படும். 

200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்கள்: குரூப் 4 தேர்வு முறை எப்படி?

ஜூலை 24ஆம் தேதி தேர்வு நடத்தப்படும். மொத்தம் 200 கேள்விகளுக்கு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடத்தப்படும். முதல் 100 கேள்விகள் தமிழ் சார்ந்து கொள்குறி வகையில் கேட்கப்படும். பொது அறிவு பகுதியில் இருந்து 75 கேள்விகளும் கணக்கு மற்றும் நுண்ணறிவு பகுதியில் இருந்து 25 கேள்விகளும் கேட்கப்படும். மொத்தம் 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும்.

முதல் பகுதியில் 150 மதிப்பெண்களுக்கு 60 மதிப்பெண்கள் பெற்றவர்களின் தேர்வுத்தாள் மட்டுமே திருத்தப்படும். மொத்தம் 90 மதிப்பெண்களைக் குறைந்தபட்சம் தேர்வர்கள் பெற வேண்டும். அவர்களின் பெயர்கள் மட்டுமே தரவரிசைப் பட்டியலில் இடம்பெறும். 

தேர்வு முடிவுகள்

அக்டோபர் மாதம் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். அதே மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். நவம்பர் மாதத்தில் நேர்காணல் நடத்தப்படும். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement