மேலும் அறிய

Tasmac Shop Closed : ஜூன் 5 ஆம் தேதி மதியம் 2 மணி வரை தான் டைம்.! டாஸ்மாக் கடையை மூடனும்- எச்சரிக்கும் மமக

Tasmac Shop Closed : ஜுன் 5 ஆம் தேதிக்குள் மதுபானக்கடை அகற்றப்படும் என வாக்குறுதியளித்ததன் அடிப்படையில் போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டது. ஆனால் இன்று வரை டாஸ்மாக் கடை மூடப்படாத நிலையில் வரும் ஜூன் 5 வெள்ளிக்கிழமை மாலை 2 மணியளவில் பூட்டுப் போடும் போராட்டம் மனிதநேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

டாஸ்மாக் கடையை மூட உத்தரவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த திமுக தோற்கடிக்கப்பட்டு புதிய அரசாக நடிகர் விஜய் தலைமையிலான புதிய அரசு பதவியேற்றுள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் தமிழகத்தில் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் செயல்பட்டு வந்த 717 மதுபானக்கடைகள் மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த வகையில் தற்போது வரை தமிழகம் முழுவதும் 450க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை ஒட்டேரி மதுப்பானக்கடையை பூட்டு போட இருப்பதாக மனிதநேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் மு ஹி ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஓட்டேரியில் டாஸ்மாக் கடை

கடந்த 2008ம் ஆண்டு முதல் சென்னை ஒட்டேரியில் டான்சி சாலையில் உருது தொடக்கப்பள்ளி,அக்பரி பள்ளிவாசல், அஹ்லே ஹதீஸ் பள்ளிவாசல்  என வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பள்ளிக்கூடத்திற்கு அருகில் உள்ள டாஸ்மாக் மதுப்பானக்கடை 249 ஐ அகற்றக் கோரி தமிழநாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த மதுக்கடை மூடப்படவில்லை. 

புதிதாக பொறுப்பேற்றிருக்கிற தமிழ்நாடு அரசு பள்ளி மற்றும் வழிபாட்டுதலங்களுக்கு அருகில் உள்ள 717 மதுபானக்கடைகளை மூட இருப்பதாக அறிவிப்பு செய்ததையடுத்து மமக சார்பில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து உடனடியாக இந்த மதுபானக்கடையை மூட வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
முதலமைச்சரின் தனிப்பரிவு உட்பட அனைத்து உயர்மட்ட அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பப்பட்டன.இரண்டுவார காலம் காத்திருந்தும் இதை புதிய அரசும் கண்டுக் கொள்ளாமல் இருந்த நிலையில் கடந்த மே 22 அன்று வெள்ளிக்கிழமை மமக சார்பில் இம்மது கடையை முற்றுகையிடும் போராட்டம் மமக பொதுச் செயலாளர் அப்துல் சமது தலைமையில் நடைபெற்றது. 

ஜூன் 5- பூட்டு போடும் போராட்டம்

போராட்ட களத்திற்கு வருகைத் தந்த அரசு அதிகாரிகள் வரும் ஜுன் 5 க்குள் மதுபானக்கடை அகற்றப்படும் என வாக்குறுதியளித்ததன் அடிப்படையில் முற்றுகைப் போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டது. இச்சூழலில்  இந்த மதுபானக்கடை இன்று வரை மூடப்படாத நிலையில் வரும் ஜூன் 5 வெள்ளிக்கிழமை மாலை 2 மணியளவில் சென்னை ஒட்டேரியில் உள்ள மதுபானக்கடை 249க்கு  பூட்டுப் போடும் போராட்டம் மனிதநேய மக்கள்
கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது தலைமையில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்வதாக அந்த அறிக்கையில்  ஜவாஹிருல்லா குறிப்பிட்டுள்ளார். 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Aavin: பச்சை நிற பால் பாக்கெட் நிறுத்தமா? - ஷாக்கான மக்கள்.. ஆவின் கொடுத்த பரபரப்பு விளக்கம்!
Aavin: பச்சை நிற பால் பாக்கெட் நிறுத்தமா? - ஷாக்கான மக்கள்.. ஆவின் கொடுத்த பரபரப்பு விளக்கம்!
DMK TVK:
"48 வயசு குழந்தையை தூக்கி சுமக்கும் ஸ்டாலின்" பெண் MLA-விற்காக களமிறங்கிய தவெக பாய்ஸ்
தவெகவுக்கு தாவிய விஜயதரணி; காங். டூ பாஜக டூ TVK- காய் நகர்த்திய காரணம்!
தவெகவுக்கு தாவிய விஜயதரணி; காங். டூ பாஜக டூ TVK- காய் நகர்த்திய காரணம்!
ஆரோவில்லில் டிஜிட்டல் பரிணாமம்: 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் கணக்காளர்களுக்கு 'ஜோஹோ' பயிற்சி!
ஆரோவில்லில் டிஜிட்டல் பரிணாமம்: 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் கணக்காளர்களுக்கு 'ஜோஹோ' பயிற்சி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Pink Police Booth : தமிழகத்திலேயே முதன்முறை! 24 மணி நேர கண்காணிப்பு..பொன்னேரியில் போலீஸ் பிங்க் பூத்
Caste Certificate Issue : அதிகாரிகள் அலட்சியம். ஊசலாடும் ராணுவ பணி கனவு? குடுகுடுப்பைகாரர் மகன் வேதனை!
Srivaikuntam TVK issue :
Kerala Baby: நடுரோட்டில் கைக்குழந்தை!அதிவேகத்தில் வந்த பேருந்து..நடத்துநர் மாஸ் சம்பவம்
TVK MLA Govt School | மகளுக்கு அரசுப் பள்ளியில் அட்மிஷன் ஆச்சர்யப்படுத்திய தவெக MLA வைரல் வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Alliance : ‘மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தடுத்து துரோகம்’ கூட்டணியில் இருந்து வெளியேறும் வைகோ..?
‘மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தடுத்து துரோகம்’ வெளியேறும் வைகோ..?
DMK TVK:
"48 வயசு குழந்தையை தூக்கி சுமக்கும் ஸ்டாலின்" பெண் MLA-விற்காக களமிறங்கிய தவெக பாய்ஸ்
தவெகவுக்கு தாவிய விஜயதரணி; காங். டூ பாஜக டூ TVK- காய் நகர்த்திய காரணம்!
தவெகவுக்கு தாவிய விஜயதரணி; காங். டூ பாஜக டூ TVK- காய் நகர்த்திய காரணம்!
DMK: சாதி, மத வாக்கு வங்கியை இழந்த திமுக..! மேலும் 3 பேரை நியமிக்க ஸ்டாலின் திட்டம் - அறிவாலய கணக்கு?
சாதி, மத வாக்கு வங்கியை இழந்த திமுக..! மேலும் 3 பேரை நியமிக்க ஸ்டாலின் திட்டம் - அறிவாலய கணக்கு?
ஆவின் பச்சைப் பால் விற்பனை ரத்து? மக்களை கடுமையாக பாதிக்கும்- அன்புமணி ஆவேசம்
ஆவின் பச்சைப் பால் விற்பனை ரத்து? மக்களை கடுமையாக பாதிக்கும்- அன்புமணி ஆவேசம்
Minister Ramesh: கோயில்களில் அடுத்த கொள்ளைக்கு முற்றுப்புள்ளி.. அமைச்சர் ரமேஷ் அதிரடி நடவடிக்கை.. மக்கள் மகிழ்ச்சி!
Minister Ramesh: கோயில்களில் அடுத்த கொள்ளைக்கு முற்றுப்புள்ளி.. அமைச்சர் ரமேஷ் அதிரடி நடவடிக்கை.. மக்கள் மகிழ்ச்சி!
Vijay BJP: CM விஜய்க்கு மெசேஜ் சொன்ன பாஜக..! டெல்லியில் தமிழர் மூலம் TVK பெற்ற அட்வைஸ்? காங்., நிலை?
CM விஜய்க்கு மெசேஜ் சொன்ன பாஜக..! டெல்லியில் தமிழர் மூலம் TVK பெற்ற அட்வைஸ்? காங்., நிலை?
Hyundai Kia Hybrid: பங்காளிங்க மொத்தமா வரோம்..! ரெண்டு 7 சீட்டர்கள் உட்பட 4 ஹைப்ரிட் கார்கள் - மைலேஜ், விலை?
பங்காளிங்க மொத்தமா வரோம்..! ரெண்டு 7 சீட்டர்கள் உட்பட 4 ஹைப்ரிட் கார்கள் - மைலேஜ், விலை?
Embed widget