"ஒரு ரூபாய் கூட கமிஷன் தர வேண்டாம்" - தொழில் தொடங்க வருவோருக்குத் தவெக எம்எல்ஏ கொடுத்த 'மாஸ்' கேரண்டி!
தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு ஒரு ரூபாய் கூட கமிஷன் தராமல் தொழில் தொடங்க உதவுவோம் - தவெக எம்எல்ஏ உறுதி

கும்மிடிப்பூண்டியில் சிப்காட் பகுதியில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு ஒரு ரூபாய் கூட கமிஷன் தராமல் தொழில் தொடங்க உதவுவோம் என்று தமிழக வெற்றி கழகத்தின் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் உறுதியளித்துள்ளார்.
இரு சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்களின் பழைய பேட்டரிகளை மறு சுழற்சி செய்து புதிய பேட்டரிகளை தயாரிக்கும் தொழிற்சாலையை கும்மிடிப்பூண்டி மற்றும் சைதாபேட்டை எம்எல்ஏக்கள் திறந்து வைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அடுத்த புதுவாயல் பகுதியில் இரு சக்கர வாகனம் மற்றும் 4 சக்கர வாகனங்களின் பழைய பேட்டரிகளின் கழிவுகளை மறு சுழற்சி செய்து புதிய பேட்டரிகளை தயாரிப்பதற்கான புதிய தொழிற்சாலை திறப்பு விழா நடைபெற்றது. செல்போன் பேட்டரிகள், வாகனங்களின் பேட்டரிகள் உள்ளிட்ட பயனற்ற பேட்டரிகளை குப்பையில் வீசுவதற்கு பதிலாக மறுசுழற்சி முறையில் அதிலிருந்து புதிய பேட்டரி தயாரிப்பதற்கான மூலக்கூறுகளை இந்த நிறுவனம் தயார் செய்கிறது. இதன் மூலம் சிறியது முதல் பெரியது வரை புதிய பேட்டரிகளை உருவாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான திறப்பு விழாவில் கும்மிடிப்பூண்டி சட்ட மன்ற உறுப்பினர் விஜயகுமார், சைதாபேட்டை சட்ட மன்ற உறுப்பினர் அருள் பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் பேசிய இந்த நிறுவனத்தின் நிறுவனர் பாலகிருஷ்ணன், இந்த நிறுவனத்தில் பேட்டரி கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் மூலக்கூறு பொருட்கள் மற்றொரு புதிய பேட்டரியை செய்வதற்கு வழிவகுக்கும் இதற்கான முதல் தொழிற்சாலை கிண்டியில் தொடங்கப்பட்டது எனவும், பின்னர் இங்கு தொடங்கப்பட்டுள்ளது எனவும், தற்போதுள்ள மின்சார பிரச்சனையை மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்கு பேட்டரி மூலம் செயல்படும் மின்சார பயன்பாட்டை அதிகப்படுத்த இது உதவும் எனவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், கும்மிடிப்பூண்டியில் சிப்காட் பகுதியில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு ஒரு ரூபாய் கூட கமிஷன் தராமல் தொழில் தொடங்க உதவுவோம் என்று உறுதியளித்துள்ளார்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















